Scholorship Exams பற்றி அறிவோம் – முழு தொகுப்பு



8 ஆம் வகுப்பு பயிலும் அரசு பள்ளி மாணவர் தன் கல்லூரி படிப்புக்கான செலவுகளுக்காக பெற்றோரை நம்பி அல்லாமல் தன் வங்கி கணக்கில் இருந்து எடுத்து செலுத்தமுடியும்

10 ஆம் வகுப்பு பயிலும் மாணவர் தன் உயர்கல்வி செலவு முழுவதையும் பெற்றோரை நம்பி அல்லாமல் தன் வங்கி கணக்கில் இருந்து எடுத்து செலுத்தமுடியும்

இதெல்லாம் சாத்தியமா? என்று ஐயம் தோன்றுகிறதா?

இது சாத்தியமே எப்படி என்றால் பள்ளியில் கற்கும் மாணவர்கள் அரசால் நடத்தப்படும் திறனாய்வுத்தேர்வுகளை எழுதி தேர்ச்சி பெற்றால் போதும் .

என்ன தேர்வு? யார் யார் எழுதலாம்?எப்படி வினாக்கள் இருக்கும்? போன்ற தங்களின் ஐயங்களை களையவே இந்த பதிவு.

மத்திய மற்றும் மாநில அரசுகளால் ஆண்டுதோறும் (NMMS, TRUSTS, NTSE ) என திறனாய்வுத்தேர்வுகள் நடத்தப்பட்டு அதில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ. 500 மற்றும் ரூ. 1250என அவர்தம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது .

தேர்வின் பெயர்: தேசிய வருவாய்வழி திறனாய்வுத்தேர்வு (National Mean cum Merit Scholarship)-NMMS

தேர்வு எழுத வேண்டிய வகுப்பு:அரசு மற்றும் அரசு உதவி பெறும் / ஊராட்சி/ நகராட்சி / மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் எட்டாம் வகுப்பு மாணவர்கள்

தேர்வு எழுதுவதற்கான தகுதிகள்: 7ஆம் வகுப்பில் 55% மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தாழ்த்தப்பட்ட வகுப்பு மாணவர்கள் 50% பெற்றிருந்தால் போதும். பெற்றோரின் ஆண்டு வருமானம் ரு1,50,000 க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை : அக்டோபர் மாதத்தில் தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகும். www.tndge.tn.nic.in என்ற இணையதளத்தில் online -ல் பள்ளி தலைமையாசிரியர் வழியாக விண்ணப்பிக்க வேண்டும் . தேர்வுக்கட்டணம் ரூ. 50

தேர்வு நடைமுறை: ஒரு மதிப்பெண் வினாக்கள் சரியான விடையைத்தேர்ந்தெடுத்தல்(objective type questions ) முறையில் கொடுக்கப்படும்.

மனத்திறன் தேர்வு (MAT) -MENTAL ABILITY TEST 90 வினாக்கள் – 90மதிப்பெண்கள் – 90 நிமிடங்கள் இடைவேளை – 20 நிமிடங்கள்

பாடத்திறன் தேர்வு – (SAT) -SCHOLASTIC ABILITY TEST 90 வினாக்கள் – 90மதிப்பெண்கள் – 90 நிமிடங்கள்

தேர்ச்சி முறை: MAT மற்றும் SAT தேர்வுகளில் குறந்தபட்சம் 40% பெற்ற மாணவர்கள் தர அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். (தாழ்த்தப்பட்ட வகுப்பு மாணவர்கள் 32% பெற்றால் போதும்).
மாற்றுத்திறனாளிகளுக்கு 3% இட ஒதுக்கீடு உண்டு. ஒவ்வொரு மாநிலத்திற்கும் பயிலும் மாணவர் எண்ணிக்கை அடிப்படையில் தேர்வு செய்யப்படும் மாணவர் எண்ணிக்கை மாறுபடும். நாடு முழுவதும் 1,00,000மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ. 500 வீதம் 4ஆண்டுகள் ( 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை ) தொடர்ந்து அவர்தம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.

தமிழ்நாடு ஊரகப்பகுதி மாணவர் திறனாய்வுத்தேர்வு: (TAMILNADU RURAL STUDENTS TALENT SEARCH EXAM) TRUSTS

தேர்வு எழுத வேண்டிய வகுப்பு: அரசு மற்றும் அரசு உதவி பெறும் / ஊராட்சி/ உள்ள கிராமப்புற பள்ளிகளில் பயிலும் ஒனபதாம் வகுப்பு மாணவர்கள்

தேர்வு எழுதுவதற்கான தகுதிகள்: 8 ஆம் வகுப்பில் 55% மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தாழ்த்தப்பட்ட வகுப்பு மாணவர்கள் 50% பெற்றிருந்தால் போதும். பெற்றோரின் ஆண்டு வருமானம் ரு1,50,000 க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை : ஜூலை அல்லது செப்டமப்ர் மாதத்தில் தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகும். www.tndge.tn.nic.in என்ற இணையதளத்தில் online -ல் பள்ளி தலைமையாசிரியர் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். தேர்வுக்கட்டணம் ரூ. 10

தேர்வு நடைமுறை: ஒரு மதிப்பெண் வினாக்கள் சரியான விடையைத்தேர்ந்தெடுத்தல்(objective type questions ) முறையில் கொடுக்கப்படும். வினாத்தாள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இருக்கும்.

மனத்திறன் தேர்வு (MAT) – MENTAL ABILITY TEST 90 வினாக்கள் – 90மதிப்பெண்கள் – 90 நிமிடங்கள்
இடைவேளை – 20 நிமிடங்கள்

பாடத்திறன் தேர்வு – (SAT) -SCHOLASTIC ABILITY TEST 90 வினாக்கள் – 90மதிப்பெண்கள் – 90 நிமிடங்கள்

தேர்ச்சி முறை: மாணவர்கள் பெறும் மதிப்பெண்களின் தரநிலை அடிப்படையில் வருவாய் மாவட்ட அளவில் வரிசைபடுத்தப்படுவர். வருவாய் மாவட்டத்திற்கு 50மாணவர்கள் மற்றும் 50மாணவிகள் தேர்வு செய்யப்படுவர். ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் ரூ. 1000 வழங்கப்படும்.

தேசிய திறனாய்வுத்தேர்வு ( NATIONAL TALENT SEARCH EXAMINATIONS)-NTSE

தேர்வு எழுத வேண்டிய வகுப்பு: அரசு மற்றும் அரசு உதவி பெறும் / ஊராட்சி/ நகராட்சி / மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவர்கள் NTSE -STAGE 1 – அந்தந்த மாநில அரசால் நடத்தப்படும்

தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை : ஜூலை அல்லது செப்டம்பர் மாதத்தில் தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகும். www.tndge.tn.nic.in என்ற இணையதளத்தில் online -ல் பள்ளி தலைமையாசிரியர் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். தேர்வுக்கட்டணம் ரூ. 50

தேர்வு நடைமுறை: ஒரு மதிப்பெண் வினாக்கள் சரியான விடையைத்தேர்ந்தெடுத்தல்(objective type questions ) முறையில் கொடுக்கப்படும். வினாத்தாள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இருக்கும். 90 வினாக்கள் – 90மதிப்பெண்கள் – 90 நிமிடங்கள்

ஆங்கிலமொழித்திறன் தேர்வு-LANAGUAGE TEST – 50மதிப்பெண்கள்

பாடத்திறன் தேர்வு – (SAT) -SCHOLASTIC ABILITY TEST 90 வினாக்கள் – 90மதிப்பெண்கள் – 90 நிமிடங்கள்

தேர்ச்சி முறை: ஒவ்வொரு மாநிலத்திற்கும் பயிலும் மாணவர் எண்ணிக்கை அடிப்படையில் தேர்வு செய்யப்படும் மாணவர் எண்ணிக்கை மாறுபடும். ஆங்கில மொழித்திறன் தேர்வில் 50மதிப்பெண்களுக்கு 40% மதிப்பெண் பெற்றாலே தகுதியாக கருதப்படும். (இதில் தாழ்த்தப்பட்ட வகுப்பு மாணவர்கள் 32% பெற்றிருந்தால் போதும்.) மாணவர்கள் பெறும் மதிப்பெண்களின் தரநிலை அடிப்படையில் மாநில அளவில் தேர்வு செய்யப்பட்டு இரண்டாம் நிலை தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர்.

NTSE – STAGE – 2 – மத்திய அரசால் நாடு முழுவதும் நடத்தப்படும் தேர்வுக்கட்டணம்¸கிடையாது.
முதல்நிலைத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மட்டுமே இரண்டாம் நிலை தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர்.
ஒரு மதிப்பெண் வினாக்கள் சரியான விடையைத்தேர்ந்தெடுத்தல் (objective type questions ) முறையில் கொடுக்கப்படும். வினாத்தாள் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் இருக்கும்.
மனத்திறன் தேர்வு (MAT) -MENTAL ABILITY TEST – 50 வினாக்கள் – 50மதிப்பெண்கள் – 45 நிமிடங்கள்
ஆங்கிலமொழித்திறன் தேர்வு-LANAGUAGE TEST – 50 வினாக்கள் – 50மதிப்பெண்கள் – 45 நிமிடங்கள்
பாடத்திறன் தேர்வு – (SAT) -SCHOLASTIC ABILITY TEST
100 வினாக்கள் – 100 மதிப்பெண்கள் – 90 நிமிடங்கள்
தவறான விடைகளுக்கு 1/3பங்கு மதிப்பெண் ( Negative Marks) குறைக்கப்படும்.
தேர்ச்சி முறை:
MAT மற்றும் SAT தேர்வுகளில் குறந்தபட்சம் 40% பெற்ற மாணவர்கள் தர அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர் . (தாழ்த்தப்பட்ட வகுப்பு மாணவர்கள் மாற்று மாற்றுதிறனாளிகள் 32% பெற்றால் போதும்).
ஆங்கில மொழித்திறன் தேர்வில் பெறும் மதிப்பெண் கருத்தில் கொள்ளப்படாது.
மாணவர்கள் பெறும் மதிப்பெண்களின் தரநிலை அடிப்படையில் தேர்வு செய்யபடுவர்.

தேர்வு செய்யப்படும் மாணவர்களில்

  • 15% தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கும்
  • 7.5% பழங்குடியின் பிரிவினருக்கும்
  • 3% மாற்றுதிறனாளிகளுக்கும் சலுகை உண்டு.
  • 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாத்ந்தோறும் ரூ. 1250வீதமும்
  • இளங்கலை UG மற்றும் முதுகலை PG –பயிலும்போது மாதந்தோறும் ரூ. 2000வீதமும்
  • முனைவர் படிப்புகளுக்கு பல்கலைக்கழக மானியக்குழு பரிந்துரை படியும் தொகை வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.

திறனாய்வுத்தேர்வுகளில் வெற்றி பெற குறிப்புகள் :
மேற்கண்ட அனைத்து திறனறித்தேர்வுகளிலும் உள்ள படிப்பறிவுத்திறன் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று வெற்றி பெற மாணவர்கள் முந்தைய வகுப்புகளின் பாடப்பகுதிகள் மற்றும் அந்த ஆண்டிற்கான பாடப்பகுதிகளில் தெளிவான ஆழ்ந்த அறிவு பெற்றிருத்தல் அவசியம் ஆகும்.
படிப்பறிவுத்திறன் (SAT) தேர்வில்
அறிவியல்
கணிதம்
சமுக அறிவியல்
ஆகிய பாடங்களிலிருந்து வினாக்கள் கேட்கப்படும்.
மனத்திறன் தேர்வில் ( MAT ) அதிக மதிப்பெண் பெற்று வெற்றி பெற மாணவர்கள் பின்வரும் திறன்களை சோதிக்கும் வகையில் வினாக்கள் அமைந்திருக்கும்.

  • பகுத்தாயும் திறன்
  • காரணம் அறியும் திறன்
  • சிந்திக்கும் திறன்
  • முப்பரிமாண வெளியில் கட்சிப்படுத்தி கண்டறியும் திறன்
  • முன்னறிவைத் தொடர்பு படுத்தும் திறன்

போன்ற திறன்களை வெளிப்படுத்த மனத்திதிறன் தேர்வு வினாக்களில் போதிய பயிற்சி அவசியம் ஆகும்.
மனத்திறன் தேர்வு நன்கு வினாக்களை புரிந்துகொண்டு சரியான திறனை வெளிப்படுத்தி விடையளித்தால் மிக எளியதாக் அமையும்.

மேலும் மனத்திறன் தேர்வு பயிற்சி மாணவர்களுக்கு பிற்காலத்தில் அரசுப்பணிகள் தேர்வு எழுதவும், வங்கி மற்று இரயில்வே தேர்வுகளை எழுதவும், குடிமைப்பணி தேர்வு எழுதவும் பெரிதும் துணை செய்யும்.
எனவே தகுதியுடைய அனைத்து மாணவர்களும் திறனாய்வுத்தேர்வுகளில் பங்கேற்று தங்கள் எதிகாலத்தை சிறப்பாக மாற்றிக்கொள்ள வாழ்த்துக்கள்

நன்றி சே. கணேஷ்,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

வெறும் அறிவிப்பான ஓய்வூதிய உயர்வு : சத்துணவு ஊழியர் ஏமாற்றம்வெறும் அறிவிப்பான ஓய்வூதிய உயர்வு : சத்துணவு ஊழியர் ஏமாற்றம்



பெரும்பாலான மாவட்டங்களில் சத்துணவு ஊழியர்களுக்கு ஓய்வூதிய உயர்வு செயல்படுத்தப்படாமல் உள்ளது. சத்துணவு ஊழியர்களுக்கு ஓய்வூதியமாக ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இத்தொகையை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 2016 சட்டசபைத் தேர்தலுக்கு முன் சத்துணவு ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து

பிளஸ் 2 சான்றிதழில் தமிழ் பிழை திருத்தம் தேர்வு துறை அறிவிப்புபிளஸ் 2 சான்றிதழில் தமிழ் பிழை திருத்தம் தேர்வு துறை அறிவிப்பு



‘பிளஸ் 2 சான்றிதழ்களில், தமிழ் பெயர்களில் திருத்தம் செய்யலாம்’ என, தேர்வுத் துறை அறிவித்துள்ளது.பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழில், இந்தஆண்டு முதல், ஆங்கிலத்துடன், தமிழிலும் மாணவர் பெயர் இடம் பெற்றுள்ளது. இதில், பல மாணவர்களுக்கு, தமிழில் பிழைகள் ஏற்பட்டுள்ளன. இது குறித்து,

பாடத்திட்டம் தயாரிப்பில் புதுமை ‘முதல்வன்’ பட ஸ்டைலில் பெட்டிபாடத்திட்டம் தயாரிப்பில் புதுமை ‘முதல்வன்’ பட ஸ்டைலில் பெட்டி



தமிழக பள்ளிக் கல்வி பாடத்திட்டம் குறித்து, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம், கருத்து கேட்க, ‘முதல்வன்’ பட ஸ்டைலில், கருத்து அறியும் பெட்டி, பள்ளிகளில் வைக்கப்பட உள்ளது. பாடத்திட்டம் தயாரிப்பில் புதுமை ‘முதல்வன்’ பட ஸ்டைலில் பெட்டி தமிழகத்தில், பிளஸ் 1, பிளஸ்

கணினி ஆசியர்கள் கவனத்திற்கு ..கணினி ஆசியர்கள் கவனத்திற்கு ..



அன்புள்ள கணினி ஆசிரியர்களே..‼ தமிழக அரசு, 765 கணினி ஆசிரியர் பணியிடங்களுக்கு இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் (Exam / Seniority) வெளியிடவில்லை என்பதை முதலில் அனைவரும் தெளிவாக புரிந்து கொள்ளவும்… இப்படி இருக்கும் பட்சத்தில், இதில் 765 Computer Instructor

தொடக்கப் பள்ளிகளில் ‘FLASH CARDS’தொடக்கப் பள்ளிகளில் ‘FLASH CARDS’



அரசு தொடக்கப் பள்ளிகளில், மாணவர்களின் ஆங்கில திறனை வளர்க்க, பல வண்ண, ‘பிளாஷ் கார்ட்’ அட்டைகள் பயன்படுத்தப்பட உள்ளன. பொதுத்தேர்வில், ‘ரேங்கிங்’ முறை ஒழிப்பு, பிளஸ் 1க்குபொதுத்தேர்வு போன்ற, பல்வேறு நடவடிக்கைகள், பள்ளிக்கல்வித் துறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதை தொடர்ந்து, தொடக்கப் பள்ளிகளில்,

சிறுபான்மையினர் கல்வி உதவிக்கு விண்ணப்பிக்க அவகாசம் செப்டம்பர் 30-ம் தேதி வரை நீட்டிப்புசிறுபான்மையினர் கல்வி உதவிக்கு விண்ணப்பிக்க அவகாசம் செப்டம்பர் 30-ம் தேதி வரை நீட்டிப்பு



சிறுபான்மையின மாணவ, மாணவியர், மத்திய அரசின் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: திருவள்ளூர் மாவட்டத்தில் வசிக்கும் சிறுபான்மையின மதத்தை சேர்ந்த மற்றும்

மே 30-இல் தமிழகம் முழுவதும் மருந்து கடைகள் அடைப்பு.மே 30-இல் தமிழகம் முழுவதும் மருந்து கடைகள் அடைப்பு.



ஆன்லைனில் மருந்து விற்பனை செய்ய மத்திய அரசு உத்தேசித்துள்ளதைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் மே 30-ஆம் தேதி மருந்து கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபடுவது என மருந்து வணிகர்கள் முடிவெடுத்துள்ளனர். தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கத்தின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டம்

மாணவர் சேர்க்கை வரும் 10-ல் ஆரம்பம்: தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை. அறிவிப்புமாணவர் சேர்க்கை வரும் 10-ல் ஆரம்பம்: தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை. அறிவிப்பு



தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக் கழக பதிவாளர் எஸ்.விஜயன்நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:2017-18ம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை ஜூலை 10-ம் தேதி தொடங்குகிறது. சான்றிதழ், பட்டயம், பட்டம், முதுகலைப் பட் டம் ஆகியவற்றில் 130 படிப்புகள் வழங்கப்படுகின்றன. புதிதாக 3 முதுகலை பட்டப்