Railway Ticket Cancel – ஊருக்குப் போகும் பிளானை மாற்றுவதால் மட்டும் ரூ.1400 கோடி வருமானம் ஈட்டும் ரயில்வே!!

ரயிலில் முன்பதிவு செய்யும் டிக்கெட்டுகளை, பயணிகள் ரத்து செய்வதன் மூலம் மட்டுமே ரூ.1400 கோடியை வருவாயாக ஈட்டி வருகிறது ரயில்வே துறை.

கடந்த ஆண்டை விட, ரயில் டிக்கெட் ரத்து செய்வதற்கான கட்டணத்தை உயர்த்தியதன் மூலம் 2016-17ம் ஆண்டில் ரயில்வே நிர்வாகம் ரூ.1400 கோடியை ஈட்டியுள்ளது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 25.29 சதவீதம் அதிகம்.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு, மத்திய ரயில்வே தகவல் அமைப்பு இந்த பதிலை அளித்துள்ளது.

மேலும் அந்த பதிலில், 2015-16ம் ஆண்டில், ரயில் டிக்கெட் ரத்து செய்யப்படுவதால் கிடைக்கும் வருவாய் ரூ.1123 கோடி அளவுக்கு இருந்த வந்த நிலையில், 2016-17ம் ஆண்டில் 1400 கோடியை வருவாயாக ஈட்டியுள்ளது.

இதன் மூலம் ரயில்களை இயக்குவதால் மட்டும் அல்ல, ரயில் டிக்கெட்டுகள் ரத்து செய்யப்படுவதாலும் மிகப்பெரிய தொகையை ரயில்வே வருவாயாக ஈட்டுவது தெரிய வந்துள்ளது.

மேலும், 2016-17ம் ஆண்டில் முன்பதிவு செய்யாத டிக்கெட்டுகள் மூலம் ரூ.17.87 கோடியை வருவாயாக ஈட்டுகிறது.

ரயில்வே நிர்வாகம், ரயில் டிக்கெட்டுகளை ரத்து செய்வதற்கான கட்டணத்தை கடந்த ஆண்டு அதிகரித்தது. இதன் மூலம், ஏற்கனவே இருந்த தொகை இரண்டு மடங்காக அதிகரித்தது. இது மிகப்பெரிய முறைகேடு. உடனடியாக ரயில் டிக்கெட்டுகளை ரத்து செய்வதற்கான கட்டணங்களை ரயில்வே துறை குறைக்க வேண்டும், இதுவரை பிடித்தம் செய்த கட்டணங்களையும் வட்டியுடன் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பிய சமூக ஆர்வலர் கௌட் கூறியுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top