டெல்லி: கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 10,039 ஆசிரியர் காலிபணியிடங்களை நிரப்பக்கோரிக்கை வைத்துள்ளனர். மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திற்கு கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் அமைப்பு கடிதம் அனுப்பியுள்ளது. கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 14,114 மற்ற பணிகளும் நிரப்பப்படாமல் உள்ளன.


சுயநிதி பள்ளிகளுக்கான கல்வி கட்டண கமிட்டிக்கு புதிய தலைவராக, நீதிபதி மாசிலா மணி பொறுப்பேற்றுள்ள நிலையில், கட்டண விகிதம் முறையாக நிர்ணயிக்கப்படுமா என, பெற்றோரும், மாணவர்களும் எதிர்பார்த்துள்ளனர். சுயநிதி பள்ளிகளுக்கான கல்வி கட்டண கமிட்டி தலைவராக இருந்த, நீதிபதி சிங்கார வேலுவின் பதவிக்காலம், 2015,டிசம்பரில் முடிந்தது. அதன்பின், சிறப்பு அதிகாரி மனோகரனின் பதவிக் காலமும் முடிந்து, Read more…


மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், 41 பாடங்கள், வரும் கல்வி ஆண்டில் கைவிடப்படுகின்றன. சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 படிப்பில், விருப்பப் பாடம் மற்றும் தொழிற்கல்வி பாடங்கள் நடத்தப்படுகின்றன. முக்கிய பாடங்களுடன், இந்த கூடுதல் பாடங்களையும் மாணவர்கள் தேர்வு செய்வது வழக்கம். இந்நிலையில், பல தொழில் பாடங்களுக்கு, போதிய Read more…


வி.ஏ.ஓ., பதவிக்கான இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. டி.என்.பி.எஸ்.சி., செயலர் விஜயகுமார் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கிராம நிர்வாக அலுவலரான, வி.ஏ.ஓ., பதவிக்கு, நேரடி நியமனம் செய்ய, டி.என்.பி.எஸ்.சி., 2016, பிப்., 28ல், எழுத்து தேர்வை நடத்தியது. இதில், தேர்வானவர்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தி, காலியிடங்கள் நிரப்பப்பட்டன.இன்னும், Read more…


பாரத ஸ்டேட் வங்கியில் உள்ள கணக்கை முடித்துக் கொள்ள, 575 ரூபாய் அபராதம்வசூலிக்கப்படுவது, வாடிக்கையாளர்களை அதிர்ச்சி அடைய வைத்து உள்ளது. பொதுத் துறை வங்கியான, எஸ்.பி.ஐ., எனப்படும், பாரத ஸ்டேட் வங்கி, வாடிக்கையாளர்களின், குறைந்தபட்ச இருப்புத் தொகை வரம்பை சமீபத்தில் உயர்த்தியது.இதன்படி, மாநகரங்களில், 5,000; நகரங்களில், 3,000; சிறிய நகரங்களில், 2,000, கிராமங்களில், 1,000 ரூபாய் Read more…


மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ.,யின், 10ம் வகுப்பு மாணவர்களுக்கான, பொதுத் தேர்வு முறையில் மாற்றம் கொண்டு வரப்படுகிறது. சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, பள்ளி அளவிலும், தேசிய அளவிலும், தனித்தனி தேர்வுகள் நடத்தப்படுகின்றன. மாணவர்கள், ஏதாவது ஒருமுறையில், ஆண்டு இறுதி தேர்வை எழுத வேண்டும். இதில், பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டதால், வரும் ஆண்டு முதல், Read more…


ஈரோடு: ராஷ்டிரிய இந்தியன் மிலிட்டரி கல்லுாரியில், 8ம் வகுப்பில் சேர, மாணவர்களுக்கு மட்டும் தகுதித்தேர்வு நடக்க உள்ளதாக, தமிழக அரசு தலைமை செயலக பொது (ராணுவம்) துறை மூலம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஈரோடு கலெக்டர் பிரபாகர் வெளியிட்ட அறிக்கை: ராஷ்டிரிய இந்தியன் மிலிட்டரி கல்லுாரியில், 8ம் வகுப்பில் சேர்வதற்கான தகுதித்தேர்வு, மாணவர்களுக்கு மட்டும் நடக்க உள்ளது. Read more…


மருத்துவ பட்ட மேற்படிப்பு ஒழுங்குமுறை விதிகளின்படி குக்கிராமங்கள் மற்றும் மலைக் கிராமங்களில் பணியாற்றும் அரசு மருத்துவர்களுக்கு மருத்துவ பட்ட மேற்படிப்பில் கூடுதல் மதிப்பெண் வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவையைச் சேர்ந்த அரசு மருத்துவரான ராஜேஸ் வில்சன், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: நான் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக கோவை சோலையார்நகர் Read more…


ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான ஹால் டிக்கெட் ஏப்ரல் 3-வது வாரத்தில் வழங்க ஏற்பாடு. ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப் பங்களை பரிசீலனை செய்யும் பணி ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்தில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. விண்ணப்பதாரர்களுக்கு ஏப்ரல் 3-வது வாரத்தில் ஆன்லைனில் ஹால் டிக்கெட் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வு ஏப்ரல் 29, 30 Read more…


சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை முன்னிட்டு, உதவி பொறியாளர் பணி நியமனத்திற்கான நேர்காணலை, மின் வாரியம், வண்டலுாரில் நடத்த உள்ளது. தமிழ்நாடு மின் வாரியம், 375 உதவி பொறியாளர் காலி பணியிடங்களுக்கான நேர்காணலை, சென்னை, கோயம்பேட்டில் உள்ள, விஜய் பார்க் ஓட்டலில், வரும், 13ல் இருந்து, 18 வரை நடத்த திட்டமிட்டது. இந்நிலையில், ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் Read more…


சென்னை: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பட்டதாரிகளுக்கு, ஆசிரியர் தகுதிக்கான, ‘டெட்’ தேர்வுக்கு, ‘தாட்கோ’ மூலம் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. ஆசிரியர் தகுதிக்கான டெட் தேர்வு, ஏப்., 29 மற்றும் 30ல் நடக்க உள்ளது. எனவே, ‘டெட்’ தேர்வில் தேர்ச்சி பெறும் வகையில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பட்டதாரிகளுக்கு, தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதிக் கழகமான, தாட்கோ Read more…

Copied!