சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு இலவச பயிற்சி பெற விரும்புவோர், அக்., 20க்குள் விண்ணப்பிக்கலாம் என, மதுரை காமராஜர் பல்கலை அறிவித்துள்ளது.
இதுகுறித்து, பல்கலையின் சிவில் சர்வீசஸ் தேர்வு பயிற்சி திட்ட ஒருங்கிணைப்பாளர், வேளாங்கண்ணி ஜோசப் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மதுரை காமராஜர் பல்கலையின் இளைஞர் நலத்துறை வழியாக, ஐ.ஏ.எஸ்., – ஐ.பி.எஸ்., பணிக்கான, சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு, இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்கான நுழைவு தேர்வு, நவ., ௧௨ல் நடக்கும்.
இதில் பங்கேற்க விரும்புவோர், www.mkuniversity.org இணையதளத்தில், விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து, அக்., ௨௦க்குள் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். கூடுதல் விபரங்களை, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது