Jio breaks record with over 130 mn global customers

ஜியோ புதிய சாதனை!!

இந்தியாவில் ரிலையன்ஸ் ஜியோ அறிமுகமான ஒரு வருட ஆண்டு விழாவை முன்னிட்டு ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி தனது ஊழியர்களை நன்றி தெரிவித்து கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதன்படி, ஜியோ கடந்த 365 நாட்களில் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுக்க பல்வேறு சாதனைகளை முறியடித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் 5, 2017 உடன் ஒரு ஆண்டை நிறைவு செய்த ரிலையன்ஸ் ஜியோ சேவையில் இதுவரை 13 கோடி பேர் இணைந்துள்ளனர். இத்தகைய சாதனையையொட்டி உள்கட்டமைப்பு, தொழில்நுட்பம், வாடிக்கையாளர் சேவை உள்ளிட்ட ஜியோவின் அனைத்து பிரிவுகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார். இந்திய டெலிகாம் சந்தையில் மிகப்பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதோடு சர்வதேச சந்தையிலும் ஜியோ தனக்கான இடத்தை பிடித்துள்ளது. இந்தியாவில் சேவைகளை துவங்கிய ஒரு வருட காலத்தில் 13 கோடி வாடிக்கையாளர்களை கொண்டுள்ள ஜியோவின் அசுர வளர்ச்சி ஆய்வு பொருளாகியுள்ளதாக அம்பானி தெரிவித்துள்ளார்.

செப்டபம்பர் 5, 2016 துவங்கப்பட்ட ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் மொத்தம் 30,000 நேரடி ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். செப்டம்பர் முதல் மார்ச் மாத இறுதிவரை அனைத்து சேவைகளையும் இலவசமாக வழங்கியது. இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் கட்டண சேவையை துவங்கிய ஜியோ வாழ்நாள் முழுக்க தனது வாடிக்கையாளர்களுக்கு வாய்ஸ் கால் வழங்குவதாக தெரிவித்துள்ளது.

மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையத்தின் சமீபத்திய அறிக்கையின் படி ஜூன் 2017 வரை 12.33 கோடி வாடிக்கையாளர்கள் ஜியோ சேவையை பயன்படுத்தி வருகிறது. ஜியோ அதிகாரி ஒருவரின் தகவலின் படி இந்தியாவில் இண்டர்நெட் பயன்பாடு மாதம் 20 கோடி ஜிபியில் இருந்து 150 கோடி ஜிபி வரை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதில் ஜியோ வாடிக்கையாளர்கள் மட்டும் 125 கோடி ஜிபி டேட்டாவினை பயன்படுத்துகின்றனர்.

ஜூலை மாதத்தில் ஜியோ நிறுவனர் முகேஷ் அம்பானி இந்தியாவின் அனைத்து பீச்சர் போன் பயனர்களுக்கும் ஏற்ற ஜியோபோன் சாதனத்தை முற்றிலும் இலவசமாக வழங்குவதாக அறிவித்தார். ஜியோபோன் முன்பதிவுகள் ஆகஸ்டு 24-ம் தேதி துவங்கியது. முன்பதிவு துவங்கியது முதல் பல லட்சம் பேர் முன்பதிவு செய்ததால் ஒரே நாளில் முன்பதிவு நிறுத்தப்பட்டது. ஜியோபோன் முன்பதிவில் வாடிக்கையாளர்கள் வழங்கிய வரவேற்பைத் தொடர்ந்து முன்பதிவு தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக ஜியோ அறிவித்தது.

அந்தவகையில் ஜியோபோன் வாங்க முதற்கட்ட முன்பதிவில் சுமார் 60 லட்சத்திற்கும் அதிகமானோர் முன்பதிவு செய்துள்ளனர் என அறிவித்துள்ளது. ஒரே நாளில் இத்தனை பேர் முன்பதிவு செய்திருப்பது ஜியோவின் எதிர்பார்ப்புகளை மிஞ்சிவிட்டதாக தெரிவித்துள்ளது. முன்னதாக வாரத்திற்கு 50 லட்சம் ஜியோபோன்களை விநியோகம் செய்ய ஜியோ திட்டமிட்டிருந்த நிலையில் ஜியோபோன் விநியோகம் செப்டம்பர் 21-ம் தேதி துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top