JACTTO GEO ஆசிரியர்கள் வேலைநிறுத்தம் எதிரொலி:பள்ளிகளில் ஆசிரியர் பயிற்சி மாணவர்கள், பகுதிநேர ஆசிரியர்கள் மூலம் பாடம்

ஆசிரியர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக, பல பள்ளிகளில் ஆசிரியர் பயிற்சி மாணவர்கள், பகுதிநேர ஆசிரியர்கள் மூலம் மாணவர்களுக்கு வகுப்பு நடத்தப்பட்டது.

ஆசிரியர்கள் பற்றாக்குறை காரணமாக காலாண்டு தேர்வில் ஒன்றுக்கும் மேற்பட்ட தேர்வறைகள் ஒரே தேர்வறைகளாக மாற்றப்பட்டன.ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு சார்பில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் தமிழகம் முழுவதும் நேற்று தொடங்கியது. இந்தகூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள ஆசிரியர் சங்கங்களைச் சேர்ந்த பெரும்பாலான ஆசிரியர்கள் நேற்று வகுப்புகளை புறக்கணித்து வேலைநிறுத்தத்தில் கலந்து கொண்டனர்.

ஆசிரியர் பற்றாக்குறை

இதன் காரணமாக அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை ஏற்பட்டது. இதை சரிசெய்யும் பொருட்டு நேற்று ஆசிரியர் பயிற்சி மாணவ-மாணவிகள் (பிஎட் மற்றும் இடைநிலை ஆசிரியர் பயிற்சி) மற்றும் பகுதிநேர ஆசிரியர்கள் (தையல், ஓவியம், இசை, உடற்கல்வி)உதவியுடன் வகுப்புகள் நடைபெற்றன.எஸ்எஸ்எல்சி, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு நேற்று காலாண்டுத் தேர்வுகள் தொடங்கிய நிலையில், ஆசிரியர்கள் பற்றாக்குறை காரணமாக பல பள்ளிகளில் தேர்வு கண்காணிப்பு பணிக்கு போதுமான ஆசிரியர்கள் கிடைக்கவில்லை. இதைத்தொடர்ந்து, ஒன்றுக்கு மேற்பட்ட தேர்வறைகள் ஒரே தேர்வறையாக மாற்றி தேர்வுகள் நடத்தப்பட்டன.இதற்கிடையே, நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஒருசில மாணவர்கள் நேற்று வகுப்புகளை புறக் கணித்தனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top