JACTTO-GEO அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம் தலைமை செயலக ஊழியர்கள் நிலைப்பாடு என்ன?

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டத்தை அடுத்து தலைமை செயலக ஊழியர்கள் நிலைப்பாடு என்ன என்பது குறித்து இன்று முடிவு செய்யப்படுகிறது.

தமிழ்நாடு தலைமை செயலக சங்க தலைவர் ஜெ.கணேசன் அளித்த பேட்டி:

முதல்வர் அளித்த உறுதிமொழியை ஏற்று பொதுமக்கள், ஊழியர்கள் நலனை கருத்தில் கொண்டு தலைமை செயலகம் சங்கம் உள்பட 58 சங்கங்கள் அடுத்த மாதம் 15ம் தேதி வரை காலவரையற்ற போராட்டத்தை ஒத்தி வைப்பது என்று முடிவு செய்யப்பட்டது.ஆனால், சில அமைப்புகள் போராட்டம் நடத்துவோம் என்று ஜாக்டோ- ஜியோ பெயரை பயன்படுத்தி வருகின்றனர்.

இதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. இந்த நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஜாக்டோ- ஜியோவின் உயர்மட்ட குழு கூட்டம் நாளை சேப்பாக்கம் பெல்ஸ் ரோட்டில் உள்ள ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் சங்கத்தில் நடைபெறுகிறது. இதில் முக்கிய முடிவுகள் எடுத்து அறிவிக்கப்படும். தலைமை செயலக சங்கத்தின் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதில் போராட்டத்தில் ஊழியர்கள் கலந்து கொள்வார்களா அல்லது கலந்து கொள்ள மாட்டார்களா என்பது குறித்து அறிவிக்கப்படும். தலைமை செயலக சங்கத்தில் 50,000 ஊழியர்கள் உள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டதாக 75,000 ஊழியர்களுக்கு இது வரை நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top