அரசு பள்ளி ஆசிரியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் அரசு பள்ளியில் சேலம் ஆட்சியர் ரோகிணி பாடம் நடத்தினார்.

அரசு பள்ளி ஆசிரியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் ஆத்தூரில் உள்ள அரசு பள்ளியில் சேலம் ஆட்சியர் ரோகிணி பாடம் நடத்தினார்.

ஊதியக் குழுவில் உள்ள முரண்பாடுகளைக் களைய வேண்டும். தொழில் வரியை ரத்து செய்ய வேண்டும். மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும். பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். 7-ஆவது ஊதியக்குழு பரிந்துரைப்படி ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ வலியுறுத்தி வந்தது.

வேலைநிறுத்தம்
இன்று முதல் காலவரையற்ற போராட்டத்தில் அந்த அமைப்பின் ஒரு பிரிவினர் தொடங்கினர். இதனால் தமிழகம் முழுவதும் பெரும்பாலான பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லை.

ஆய்வு மேற்கொண்டார்
இந்நிலையில் சேலம் மாவட்டம் ஆத்தூரில் கருத்தராஜபாளையம் என்ற கிராமத்தில் உள்ள அரசு பள்ளிக்கு சென்ற ஆட்சியர் ரோகிணி ஆய்வு நடத்தினர். பின்னர் அங்கு ஆசிரியர் இல்லாததால் அவரே பாடம் நடத்தினார். சுமார் ஒரு மணி நேரம் பாடம் நடத்திய அவர் மாணவர்களின் வருங்கால திட்டங்கள் குறித்து கேட்டறிந்தார்.

முதல் பெண் கலெக்டர்
சேலத்தின் முதல் பெண் ஆட்சியரான ரோகிணி மாற்று திறனாளிகளிடம் கனிவோடு நடந்து கொள்வது, திட்டங்களை அதிரடியாக செயல்படுத்துவது என்று மக்கள் மனதில் இடம் பிடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

மதுரை தமிழில்
பிறந்தது மகாராஷ்டிர மாநிலம் என்றாலும் அவர் மதுரை தமிழில் மக்களிடம் குறைகளை கேட்டு அசத்திவருகிறார். டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகும் வகையில் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கவும், டீ கடைகள், ஹோட்டல்கள், டயர் பஞ்சர் போடும் கடைகள் உள்ளிட்டவரை ஆய்வு செய்து அகற்றவும் ஆட்சியர் ரோகிணி உத்தரவிட்டுள்ளார்.

சீல் வைக்கப்படும்
நோட்டீஸ் வழங்கிய பிறகும் சுகாதார சீர்கேட்டை கடை உரிமையாளர்கள் கட்டுப்படுத்தாவிட்டால் அவற்றுக்கு சீல் வைக்கப்படும் என்றும் ஆட்சியர் ரோகிணி பல்வேறு அதிரடிகளை எடுத்துள்ளார். அதேபோல் மாணவர்களின் உயிரை குடிக்கும் ப்ளூவேல் விளையாட்டு விளையாடுபவர்களை மீட்கவும் அவர் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top