JACTO-GEO உயர்நீதிமன்றம் நடந்தது என்ன??? விசாரணை குறித்த முழு விவரம்

நேற்று 15-09-2017 உயர்நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் JACTO-GEO நிர்வாகிகள் ஆஜர் ஆகினர். நீதிபதி அவர்கள் பல்வேறு கேள்விக்கனைகளை தொடுத்தார்.

  • நமது சார்பில் மூத்த வழக்கறிஞர் தக்க பதிலளித்தார்
  • நமது போராட்டம் கடுமையாக நடத்தப்படுவதற்கான காரணத்தை தெளிவாக எடுத்துரைத்தார்
  • நீதிபதி அவர்கள் நாட்கள் கடந்தும் பேராட்டம் அதிகப்படியான எண்ணிக்கை கூடுவதால் போராட்டத்தை கைவிட அறிவுறுத்தினார்
  • நமது மூத்த வழக்கறிஞர் போராட்டத்தை வாபஸ் பெற முடியாது என அழுத்தம் திருத்தமாக எடுத்துரைத்தார்
  • நீதிபதி அவர்கள் மிகவும் கண்டிப்புடன் போராட்டத்தை நிறுத்தவில்லை எனில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு சந்திக்க நேரிடும் என்று கடுமையாக எச்சரிக்கை செய்தார்
  • JACTO-GEO கோரிக்கை நிறைவேற்ற வேண்டும் இல்லையெனில் போராட்டம் தொடரும் என்று வாதிட்டார்  நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சந்திக்க தயார் என பதில் அளித்தார்
  • நீதிபதி அவர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றால், உங்கள் கோரிக்கைகள் குறித்து நீதிமன்றம் உத்தரவாதம் கொடுக்கும் என்ற வாதத்தை முன் வைத்தார்கள் பிறகு உங்கள் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை செய்து பதில் தாருங்கள் என்று கூறி அவகாசம் கொடுத்தார்.
  • ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் உயர் மட்ட குழுவினரோடு ஆலோசனை நடத்தினர்.
  • பிற்பகல் விசாரணை தொடங்கிய உடன் நீதிபதி அவர்கள் நீங்கள் முன்னரே நீதிமன்றத்தில் வழக்கை முன் வைத்திருந்தால் கோரிக்கைகள் நிறைவேற்ற வழி செய்து இருப்போம் என்று ஆலோசனை கூறினார்கள்
  • போராட்டம் எக்காரணம் கொண்டும் வாபஸ் கிடையாது நீதிபதி அவர்கள் வேண்டுகோள் ஏற்று திங்கள் வரை ஒத்திவைப்பு செய்து ஒத்துழைப்பு செய்கிறோம் என்று நமது தரப்பு வாதம் முன் வைக்கப்பட்டது
  • ஊதியக்குழு முரண்பாடுகள் குறித்து 3 வழக்குகள் மற்றும் CPS தொடர்பாக 4 வழக்குகள் நிலுவையில் உள்ளது சுட்டிக்காட்டி நமது தரப்பு வாதம் முன் வைக்கப்பட்டது*

அரசு தரப்பு வாதம்

  • 85% அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பணியில் உள்ளார்கள்.15% பேர் மட்டுமே போராட்டத்தை செய்கின்றனர் என்று வாதிட்டார்
  • கோபமடைந்த நீதிபதி அவர்கள் நாங்கள் ஊடகங்கள் மற்றும் செய்திகள் அனைத்தும் உற்று நோக்கி கொண்டு இருக்கிறோம்.
  • தடைகள் தாண்டி நாட்கள் செல்ல செல்ல எண்ணிக்கை அதிகமாக வருவதை அறிந்து உள்ளோம் பொய்யான தகவல் தர வேண்டாம் என்று கண்டனம் தெரிவித்தார்
  • தலைமை செயலாளர் நீதிமன்றத்தில் கட்டாயம் ஆஜராக வேண்டும் இனி பேச்சுவார்த்தை நீதிமன்றத்தில் மட்டுமே நடைபெறும்
  • 7 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வாழ்வாதாரத்தை காக்கும் வகையில் நீதிபதி அவர்கள் நல்லவோரு முடிவு எடுக்கப்பட உள்ளது என்று திட்டமாக கூறினார்கள்

வியாழன் விசாரணைக்கு எடுத்து கொள்ள காரணம் என்ன?

  1. JACTO-GEO வழக்கறிஞர் திங்கள் அன்று ஏற்கனவே திட்டமிட்டு உள்ளபடி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வேறு வழக்கை வாதாட செல்ல உள்ளார்
  2. செவ்வாய் அன்று அரசின் முதன்மை செயல் அதிகாரியான அரசு தலைமை செயலாளர் உச்சநீதிமன்றம் செல்ல வேண்டும் (வேறு ஒரு வழக்கு)
  3. புதன் அன்று உயர் நீதிமன்றத்தில் வேறு முக்கிய வழக்கு விசாரணை எனவே வியாழன் அன்று வழக்கை விசாரணைக்கு தள்ளி வைத்தார்

நேற்றைய பொழுது சென்னை உயர் நீதிமன்றத்தில் திரு .கிருபாகரன் அவர்கள் பார்வை நமது பக்கம் திரும்பியது இன்று மதுரை நீதிமன்றத்தில் சாதகமான சூழல்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top