Fixation / Option form குழப்பங்கள் : TNPTF பொதுச்செயலாளரின் அறிக்கை 15.11.2017

  • ஊதியக்குழுவிற்குப் பின்னர் ஆசிரியரின் புதிய ஊதியத்தினை நிர்ணயம் செய்யும் பொறுப்பு அலுவலகத்திற்கு உரியதே!
  • அலுவலகத்தில் புதிய ஊதியம் நிர்ணயம் செய்து அதற்கான படிவம் (Fixation Form) ஆசிரியர்களுக்கு வழங்கப்படும்.
  • அவ்வாறு அலுவலகம் நிர்ணயம் செய்ததைவிட கூடுதல் பணப்பலன் கிடைக்க வழிவகை இருக்கும் எனில்,
  • புதிதாக எவ்வாறு ஊதிய நிர்ணயம் செய்தால் கூடுதல் பணப்பலன் கிடைக்கும் என்பதைத் தெளிவுபடுத்தி,
  • ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்ட தேதியில் இருந்து, 3 மாதங்களுக்குள் விருப்பப் படிவம் (Option Form) வழங்க வேண்டும். இது வழக்கமான நடைமுறை.
  • இதன்படி விருப்பம் தெரிவிக்கும் நபர் ஊதியக்குழு அரசாணை 303 வெளியிடப்பட்ட 11.10.2017-ல் இருந்து 3 மாதங்களுக்குள் அதாவது, 10.1.2018-ற்குள் தங்களின் விருப்பத்தினைத் தெரிவிக்கலாம்.

எவ்வாறு எனில், உதாரணமாக

  • பணி உயர்வு பெறும் நபர், தற்போது ஊதியம் நிர்ணயம் செய்வதைவிட அடுத்த வளரூதியம் / தேர்வுநிலை / சிறப்புநிலைக்குப் பின்னர் ஊதிய நிர்ணயம் செய்வதால் கூடுதல் பணப்பலன் கிடைக்கும் எனில்,
  • அதுவரை நான் பழைய ஊதியத்திலேயே தொடர்ந்து கொள்கிறேன்” என விருப்பம் தெரிவிக்க ஊழியர் நல அரசாணைகளில் வழிவகை உண்டு.

அல்லது,

  • “புதிய ஊதிய நிர்ணயத்தால் எனக்குப் பலனேதுமில்லை. எனவே, ஊதியக்குழுவிற்கு முந்தைய எனது ஊதியத்துடன் இருக்க விரும்புகிறேன்” என்றும் விருப்பப் படிவம் தெரிவிக்கலாம். (இவர்களுக்கு என தனி அகவிலைப்படியானது பழைய ஊதியக்குழுவின் தொடர்ச்சியாகவே வழங்கப்பட்டு வருகிறது)
  • எனவே, ஊதிய நிர்ணயம் செய்த பின்னர் அதனடிப்படையில் விருப்பம் தெரிவிப்பது என்பது வழக்கமான நடைமுறையே!
  • இந்நடைமுறையை முன்வைத்து சிலர், தங்களின் சுய இலாபத்திற்காக, இடைநிலை ஆசிரியர்களை 2009, TET என்று பிளவுக்குட்படுத்தி, ஜாக்டோ-ஜியோ-வையும் முறையாக அணுகாது, கூட்டமைப்பின் ஒற்றுமையைக் குலைத்து, தனித்து வழக்காடுவோம் என, வஞ்சிக்கப்பட்டுள்ள இடைநிலை ஆசிரியர்களை நயவஞ்சகத்தோடு கூட்டம் சேர்ப்பித்து குழப்பம் விளைவித்து வருகின்றனர்.
  • இ.நி.ஆ ஊதியப் பிரச்சினையில் உண்மையான அக்கறை இருந்திருப்பின், இவர்கள் ஜாக்டோ-ஜியோ மீது தொடுக்கப்பட்ட வழக்கில் முறையான ஆவணங்களைச் சமர்ப்பித்து வழக்கினை செறிவூட்டியிருக்க வேண்டும்.
  • ஆனால் இவர்களின் எண்ணம் இ.நி. ஆசிரியர்களுக்கு 8370-2800 மட்டும் போதும் என்பதே. ஏனெனில் இதனைக் கூறினால் தான் இ.நி. ஆசிரியர்களைப் பிளவுக்குட்படுத்தித் தாங்கள் வளர வழியேற்படும் என சூது செய்து வருகின்றனர்.
  • தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்துவதோ, ரூ.9300-4200. இது நாம் முன்னர் பெற்று வந்ததில் முறைகேடாக 6-வது ஊதியக்குழுவால் பறிக்கப்பட்டதே.
  • மத்திய அரசின் ஆறாவது ஊதியக்குழுவில் இடைநிலை ஆசிரியர்களுக்கு (ஊதியக்கட்டு-2) ரூ.9300-4200 தர ஊதியம். ஆனால் 1.6.2009 அன்று அன்றைய திமுக அரசால் வெளியிடப்பட்ட ஆறாவது ஊதியக்குழுவில் (ஊதியக்கட்டு-1) ரூ.5200-2800 தர ஊதியம் என அறிவிக்கப்பட்டது.
  • 5.6.2009 அன்று கொடைக்கானலில் கூடிய மாநிலச் செயற்குழு இதைக் கண்டித்து, மத்திய அரசு போல் ஊதிய விகிதம் அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி 6.6.2009 அன்று சுமார் 30 ஆயிரம் ஆசிரியர்கள் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் எழுச்சியுடன் நடத்தப்பட்டது.
  • அன்றிலிருந்து தனிச்சங்க நடவடிக்கையாக பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டதோடு, டிட்டோஜாக், ஜாக்டோ என கூட்டியக்கங்களின் மூலமும் தொடர்ந்துபோராடி இன்று ஜாக்டோ-ஜியோ என்ற பதாகையின் கீழ் போராடி வருகிறது, தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி.
  • போராட்ட காலத்தில் ஜாக்டோ-ஜியோ மீது போடப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளதாலேயே, அடத்த கட்ட இயக்க நடவடிக்கை தாமதப்பட்டு வருகிறது.
  • இருந்தும், நம்மீது போடப்பட்ட வீணான வழக்கினை நமக்குச் சாதகமாக்கிக் கொண்டு ஜாக்டோ-ஜியோ தொடர்ந்து களத்தில் உள்ளது என்பதற்கு ஊதியக்குழுவை அறிவிக்க வைத்த நீதிமன்றத் தீர்ப்பே சான்று.
  • தற்போது, நீதிமன்ற நடைமுறைகளால் அடுத்தகட்ட விசாரணை தாமதமானாலும் அதனூடாய் இ.நி. ஆசிரியர் ஊதிய முரண் தொடர்பான மனு (Affidavit) தயார்செய்யப்பட்டு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
  • இந்நிலையில், நமது தோழர்கள் சமூக வலைதளங்களில் உலாவும், “Fixation Return வாங்கலேனா சம்பளம் கூடாமலே போய்விடும்” என்ற வீணான தர்க்கமற்ற பதற்றச் செய்திகளை நம்ப வேண்டாம் என்றும்,
  • நமது இலக்கு பறிக்கப்பட்ட ரூ.4200 தரவூதியத்தினை மீட்டு ஊதியக்கட்டு 2-ல் மீண்டும் இடம்பிடிப்பதே என்றும்,
  • ரூ.9300-4200 நிலையில் வைத்து ஊதிய நிர்ணயம் செய்வதே புதிய ஊதியக்குழுவிலும் எதிர்வரும் காலங்களிலும் நிரந்தரப் பயனை இடைநிலை ஆசிரியர்களுக்குப் பெற்றுத் தரும் என்றும்,
  • அதற்கான இயக்க நடவடிக்கைகள் ஜாக்டோ-ஜியோ வழக்கின் விசாரணையிலும், அதனைத் தொடர்ந்து களப்போராட்டத்திலும் இருக்கும் என்றும், தோழமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
  • மேலும், இன்று (15.11.2017) சென்னையில் நடைபெற்ற ஜாக்டோ-ஜியோவின் ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டத்தில்,
  • 24.11.2017 அன்று மாலை 5 மணியளவில் வட்டத் தலைநகரங்களில், மாபெரும் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
  • அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து 1.12.2017 அன்று நடைபெற உள்ள ஜேக்டோ ஜியோ உயர்மட்டக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.

தோழமையுடன்,
செ.பாலசந்தர்,
பொதுச் செயலாளர்,
தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி

2 thoughts on “Fixation / Option form குழப்பங்கள் : TNPTF பொதுச்செயலாளரின் அறிக்கை 15.11.2017”

  1. Hello Sir,

    Please clarify the below query,
    What will happen if we don’t submit option form within the months from the date of issue of GO?

    Expecting ur reply ASAP

  2. Hello Sir,

    Please clarify the below query,
    What will happen if we don’t submit option form within the 3 months from the date of issue of GO?

    Can we expect any extension date for this?

    Expecting ur reply ASAP

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top