BSNL -ன் 666 பிளான் அறிமுகம்: அளவற்ற அழைப்பு; Daily 2GB Internet Data

ஜியோவுக்கு எதிரான போட்டியில் ஏற்கனவே களமிறங்கி சக்கைப் போடு போடும் BSNL தற்போது 666 பிளானை அறிமுகம் செய்துள்ளது.

ப்ரீபெய்ட் திட்டத்துக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த ரூ.666 திட்டத்தில், எந்தவொரு செல்போன் எண்ணுக்கும் அளவற்ற அழைப்பு மற்றும் தினமும் 2ஜிபி டேட்டா வசதியை வழங்குகிறது. அதுவும் இந்த சலுகை 60 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.

மேலும், பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்கள், ரூ.666 திட்டத்தைத் தவிர, ரூ.349, ரூ.333, ரூ.444 என பிற திட்டங்களையும் மாற்றிக் கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.

தொலைத்தொடர்புத் துறையில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்துக்கு ஏற்ப, பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கும் பல்வேறு சிறந்த திட்டங்களை அறிவித்து வருகிறோம் என்று பிஎஸ்என்எல் வாரிய இயக்குநர் ஆர்.கே. மிட்டல் கூறினார்.

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு ரூ.786 மற்றும் ரூ.599 என்ற திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. அதே போல, டேட்டா வசதி தேவைப்படும் வாடிக்கையாளர்கள் ரூ.444 திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். அதில் 90 நாட்களுக்கு அளவற்ற டேட்டா வசதி உள்ளது.

துவக்கத்தில் இலவச அழைப்பு,டேட்டா என்ற அறிவிப்போடு அறிமுகமான ஜியோ சிம்களால், உச்சத்தில் இருந்த டேட்டா மற்றும் அழைப்புக் கட்டணங்கள் மளமளவென சரிந்து, போஸ்ட் பெய்டில் ஆயிரம் ரூபாய் என்பதில் இருந்து ரூ.500 முதல் ரூ.600க்குள் அளவற்ற அழைப்பு என்ற வசதி உருவானது.

இதுநாள் வரை சாத்தியமில்லாத ஒன்றாக இருந்த அளவற்ற அழைப்பும், ஒரு நாளைக்கு 1 முதல் 4 ஜிபி டேட்டா என்பதும் இன்று எப்படி சாத்தியமானது, இதுவரை நம்மிடம் இருந்து பெற்ற தொகைக்கு என்ன கணக்கு என்பதும் மக்களின் தொடர் கேள்வியாக உள்ளது

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top