தந்தை பெரியார் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

தமிழக அரசு வழங்கும் சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.ஆண்டுதோறும் சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை கவுரவிக்கும் விதமாக சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது.

இவ்விருதைப்பெறுவோருக்கு ரூ.1 லட்சம் பரிசுத் தொகையும், ஒரு பவுன் தங்கப் பதக்கமும் வழங்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், 2017-ம் ஆண்டுக்கான தமிழக அரசின் சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதுக்கு உரியவர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.

எனவே, சமூக நீதிக்காக பாடுபட்டவர்கள் அவர்கள் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் சமுதாயத்தைச் சேர்ந்த மக்களின் சமூக, பொருளாதார மற்றும் கல்வி மேம்பாடு அடைய மேற்கொண்ட முயற்சிகள், அம்மக்களின் வாழ்க்கைத்தரம் உயர கடந்த ஆண்டுகளில் அவர்களால் மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் சாதனைகள் ஆகியவற்றுடன் அவர்களது பெயர், சுயவிவரம் மற்றும் முழு முகவரியுடன் நவம்பர் 5-ம் தேதிக்குள் மாவட்ட ஆட்சியருக்கு விண்ணப்பிக்கலாம்.இவ்வாறு தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top