2010ல் பி.இ படித்து பட்டம் பெற முடியாதவர்களுக்கு அரியர் எழுத மீண்டும் வாய்ப்பு: அமைச்சர் அன்பழகன்

2010-ல் பி.இ படித்து பட்டம் பெற முடியாதவர்களுக்கு படிப்பை முடிக்க மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

பி.இ பட்டத்தை 7 ஆண்டுகளுக்கு முடிக்காதவர்களுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். தேர்வு எழுத பிப்ரவரி 2018 மற்றும் ஆகஸ்ட் 2018 வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. 2010 ல் பி.இ படித்தவர்களில் 40,000 பேர் அரியர் வைத்துள்ளதால் மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

தேர்வெழுதும் கால அட்டவணை, பாடங்களை தேர்வு செய்யும் முறை மற்றும் கட்டண தொகை செலுத்தும் தேதி உள்ளிட்ட விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு இடத்தில் மட்டும் தேர்வுகள் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அவகாசம் அளிக்கப்பட்டும் பிஇ பட்டப்படிப்பை முடிக்காகதவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அன்பழகன் அறிவித்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top