மத்திய அரசு ஊழியர்களுக்கு ஏழாவது சம்பள கமிஷன் பரிந்துரைத்த வீட்டு வாடகைப் படி உள்ளிட்ட முக்கிய அம்சங்க ளுக்கு சில திருத்தங்களுடன் மத்திய அமைச் சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.
இதன் மூலம் மத்திய அரசு ஊழியர்கள் 50 லட்சம் பேர் பலனடைவர்.இது குறித்து மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியதாவது:
மத்திய அரசு ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டு உள்ளது. ஏழாவது சம்பள கமிஷன் பரிந்துரையில் சிறிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு அதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. குறிப்பாக எச்.ஆர்.ஏ., எனப்படும் வீட்டு வாடகைப் படி உயர்த்தப்பட்டு உள்ளது; அவை ஊழியர்கள் வசிக்கும் நகரங்களுக்கு ஏற்ப மாறுபடும். இதன் மூலம் 7.5 லட்சம் ஊழியர்கள் பலனடைவர்.
அதே போல் ராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் சில படிகளும் உயர்த்தப்பட்டு உள்ளன. ஓய்வூதியர் களுக்கானமருத்துவப் படி மாதம் 500 ரூபாயிலி ருந்து 1,000 ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது. இதர மருத்துவப் படிகளும் உயர்த்தப்பட்டு உள்ளன. இதே போல், ஏழாவது சம்பள கமிஷனின் பல பரிந்துரை கள் ஏற்கப்பட்டு உள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.
‘ஏர் – இந்தியா’ பங்குகளை விற்பனை செய்ய அனுமதி
கடன் பிரச்னையில் சிக்கித் தவிக்கும், பொதுத் துறை விமான சேவை நிறுவனமான ‘ஏர் – இந்தியா’ வின் பங்குகளை விற்க மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது.விமான சேவை நிறுவ னமான ஏர் – இந்தியா 52 ஆயிரம் கோடி ரூபாய் கட னில் சிக்கி மீண்டும் வர முடியாமல் தவித்து வருகி றது.
2012ல் அப்போதைய ஐ.மு., கூட்டணி அரசு ஏர் – இந்தியாவின் கடன் பிரச்னைகளுக்கு உதவும் வகை யில் 30 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்தை அறிவித்தது.
அதன் உதவியுடன் இதுவரை ஏர் – இந்தியா இயங்கி வருகிறது.இந்நிலையில் ஏர் – இந்தியா வின் கடன் பிரச்னைகளுக்கு தீர்வாக அந்த நிறு வனத்தில் அரசுக்கு உள்ள பங்குகளை விற்க மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது.
மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி டில்லி யில் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: ஏர் – இந்தியா நிறுவன பங்குகளை விற்க மத்திய அமைச்சரவை கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளது. விற்கப்படும் பங்குகளின் எண்ணிக்கை, அதற்கான நடைமுறைகள் குறித்து அமைச்சர்கள் கொண்டு அமைக்கப் படும் குழு முடிவு செய்யும். இவ்வாறு அவர் கூறினார்.