September 1, 2017

TUSRB – Post of PC, Jail Warder and Firemen – 2017 PROVISIONAL FINAL SELECTION LIST and CUTOFF PUBLISHED | காவலர் பணியிட தேர்வு இறுதி முடிவுகள் வெளியீடு

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமத்தால் கடந்த மே 21-ம் தேதி 13,137 இரண்டாம் நிலை காவலர்கள், 1,015 இரண்டாம் நிலை சிறைக்காவலர்கள் மற்றும் 1,512 தீயணைப்பு வீரர் பணியிடங் களுக்கான எழுத்துத் தேர்வு நடத் தப்பட்டது. தமிழகம் முழுவதும் 32 மாவட்டங் களில் 410 மையங்களில் தேர்வு நடைபெற்றது. 6 லட்சத்து 32 ஆயிரம் பேர் விண்ணப்பித்து 4 லட்சத்து 82 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர். எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்ற வர்கள் 5:1 …

TUSRB – Post of PC, Jail Warder and Firemen – 2017 PROVISIONAL FINAL SELECTION LIST and CUTOFF PUBLISHED | காவலர் பணியிட தேர்வு இறுதி முடிவுகள் வெளியீடு Read More »

1997ம் ஆண்டுக்குப் பிறகு தோல்வியைச் சந்தித்துள்ள பிஎஸ்எல்வி

39 மிஷன்களை பிஎஸ்எல்வி ராக்கெட் சந்தித்துள்ளது. அதில் ஒரு முறை முழுமையானதோல்வியையும், ஒருமுறை பகுதி அளவு தோல்வியையும் சந்தித்துள்ளது. கடைசியாக 1997ம் ஆண்டு தான் பிஎஸ்எல்வி மிஷன் தோல்வி அடைந்தது. அதன் பிறகு இப்போது நடந்திருப்பது விஞ்ஞானிகளை அதிர வைத்துள்ளது. அதை விட கடந்த பிப்ரவரி மாதம் 15ம் தேதிதான் 104 வெளிநாட்டு செயற்கைக் கோள்களை சுமந்து பிஎஸ்எல்வி சி38 வெற்றிகரமாக ஏவப்பட்டது. ஆனால் இன்று நடந்த சி9 ராக்கெட் தோல்வி அடைந்திருப்பது விஞ்ஞானிகளை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. …

1997ம் ஆண்டுக்குப் பிறகு தோல்வியைச் சந்தித்துள்ள பிஎஸ்எல்வி Read More »

பிஎஸ்என்எல் அதிரடி சலுகை: ரூ.143 கட்டணத்தில் தினமும் 1 ஜிபி இணையசேவை, இலவச அழைப்பு

4ஜி VoLTE சேவையில் பிஎஸ்என்எல்: கலக்கத்தில் தனியார் நிறுவனங்கள்!

தனியார் நிறுவனங்களுக்கு போட்டியாக இந்தியாவில் 4ஜி VoLTE சேவைகளை துவங்க பிஎஸ்என்எல் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தனியார் டெலிகாம் நிறுவனங்களுக்கு போட்டியளிக்கும் வகையில் புதிய சலுகைகளுடன் இந்த திட்டம் கொண்டுவரப்படும் என தெரிகிறது. இணைய சேவைகளுக்காக 700 மெகாவாட் பேன்ட் பயன்படுத்த மத்திய அரசின் ஒப்புதலுக்கு காத்திருப்பதாக பிஎஸ்என்எல் அறிவித்துள்ளது. மேலும், பிராட்பேண்ட் தரத்தை மேம்படுத்தி, சைபர் பாதுகாப்பினை அதிகப்பட்டுத்த பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.100 கோடி வரை முதலீடு செய்வதாக தெரிகிறது.

இணை, துணை இயக்குனர்கள் கல்வி துறையில் புதிய பணியிடம்

மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்துக்கு, கூடுதலாக இணை இயக்குனர் பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. தமிழக பள்ளிக்கல்வியில், ஒன்று முதல், பிளஸ் 2 வரை புதிய பாடத்திட்டம் தயாரிக்கப்படுகிறது. இந்த பணிகளை, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மேற்கொள்கிறது. அதற்காக, ஒரு இணை இயக்குனர், இரண்டு துணை இயக்குனர்கள், கணக்கு அதிகாரி மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் பணியிடம் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.

காலாண்டு தேர்வு நடக்குமா? : மாணவர்கள் குழப்பம்

ஆசிரியர்கள், செப்., 7 முதல், தொடர் வேலை நிறுத்தம் செய்ய உள்ளதால், காலாண்டு தேர்வு நடக்குமா என, மாணவர்கள் குழப்பமடைந்துஉள்ளனர். அரசு பள்ளி ஆசிரியர் சங்கங்கள் மற்றும் அரசு ஊழியர் சங்கங்கள் இணைந்து, ‘ஜாக்டோ – ஜியோ’ கூட்டமைப்பை உருவாக்கி உள்ளன. இந்த அமைப்பின் சார்பில், தொடர் போராட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்வது; பழைய, ‘பென்ஷன்’ திட்டத்தை அனைவருக்கும் அமல்படுத்துவது; ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி, மாத ஊதியத்தை உயர்த்துவது என, பல …

காலாண்டு தேர்வு நடக்குமா? : மாணவர்கள் குழப்பம் Read More »

Scroll to Top