TET – முந்தைய தகுதித் தேர்வுகள் மூலம் நிரப்பப்படும் 1,114 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள்: பாடப்பிரிவு வாரியாக காலியிடங்கள் அறிவிப்பு.
ஏற்கெனவே நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித்தேர்வுகளில் தேர்ச்சிபெற்றவர்களைக் கொண்டு நிரப்பப்படும் 1,114 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் பாடப்பிரிவு வாரியான காலியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித்தேர்வு இன்றும், நாளையும் (சனி, ஞாயிறு) நடைபெறுகிறது. ஏற்கெனவே 2012, 2013, 2014-ம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட தகுதித்தேர்வில் தேர்ச்சிபெற்று பலர் வேலையில்லாமல் இருக் கிறார்கள். அவர்கள் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையால் பாதிக் கப்பட்டிருப்பதால் தங்களை பணியில் அமர்த்திய பின்பு புதிதாக தேர்ச்சி பெறுவோருக்கு பணி வழங்க …