March 2017

பிளஸ் 2 தேர்வு இன்றுடன் முடிகிறது: ஏப்.5-ல் திருத்தும் பணி

பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் இன்றுடன் (மார்ச் 31) முடி வடைகிறது. இதையடுத்து விடைத் தாள் திருத்தும் பணி ஏப்.5-ல் தொடங்குகிறது.பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 2-ம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் தேர்வில் பங்கேற்று வருகிறார்கள். இந்த நிலையில், கடைசி நாளான இன்று (வெள்ளிக்கிழமை) உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் ஆகிய பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெறுகின்றன.தேர்வுகள் முடிவடையும் நிலையில், விடைத்தாள் திருத்தும்பணி ஏப்ரல் 5-ம் …

பிளஸ் 2 தேர்வு இன்றுடன் முடிகிறது: ஏப்.5-ல் திருத்தும் பணி Read More »

ஆசிரியர்களின் சம்பளக்கணக்கை SGSP கணக்காக மாற்றி தர AEEO க்கள் விண்ணப்பிக்க வேண்டிய மாதிரி படிவம்

எந்தெந்த வங்கியில் ஆசிரியர்களின் சம்பள கணக்கு உள்ளதோ அக்கிளைக்கு சார்ந்த AEEO க்கள் விண்ணப்பம் அளிக்கும் படி கூறியுள்ளனர். மேலும் பணியாளர் பெயர்,கணக்கு எண்,ஆதார் எண்,பான் எண்,வங்கி MCIR எண் ஆகிய விவரங்களை இணைத்து முகப்பு கடிதம் அளிக்க கூறியுள்ளனர். ஆசிரியர்கள் தனிப்பட்ட முறையில் நேரடியாக விண்ணப்பிக்க தேவையில்லை. AEEO க்கள் விண்ணப்பிக்க வேண்டிய மாதிரி படிவம்

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கூடுதலாக 5 நாட்கள் அவகாசம்

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கூடுதலாக 5 நாட்கள் அவகாசம் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு; நாளை முதல் ஏப்ரல் 5-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். நீட் தேர்வு தொடர்பாக மாணவர்கள் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவு. 25 வயதுக்கு மேற்பட்டவர்கள் பங்கேற்க முடியாது என்ற சிபிஎஸ்இ உத்தரவு ரத்து.

ஆய்வக உதவியாளர் நியமனத்தில் அதிகாரிகள் தவறு செய்தால் நடவடிக்கை பள்ளிக்கல்வி இயக்குநர் எச்சரிக்கை

அரசு பள்ளிகளில் நியமிக்கப்பட உள்ள ஆய்வக உதவியாளர் பணிக்காக சான்றிதழ் சரிபார்த்தல்ஏப்ரல் 9, 10 மற்றும் 11-ந் தேதிகளில் நடைபெறுகிறது. இந்த நியமனத்தில் அதிகாரிகள் யாராவது தவறு செய்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் எச்சரிக்கை விடுத்து உள்ளார். சான்றிதழ் சரிபார்த்தல் தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 4 ஆயிரத்து 362 ஆய்வக உதவியாளர்பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த இடங்களை நிரப்ப பள்ளிக் கல்வித்துறை …

ஆய்வக உதவியாளர் நியமனத்தில் அதிகாரிகள் தவறு செய்தால் நடவடிக்கை பள்ளிக்கல்வி இயக்குநர் எச்சரிக்கை Read More »

Clear TET or leave, teachers told – THE HINDU NEWSPAPER

Hundreds from government aided non-minority schools may lose jobs Hundreds of teachers serving in government aided non-minority schools in the State face the threat of losing their jobs with the School Education Department obtaining written undertakings from them stating that they would be removed from service if they failed to clear the mandatory Teachers Eligibility …

Clear TET or leave, teachers told – THE HINDU NEWSPAPER Read More »

TRB : அடிப்படை தகவல் இல்லாத டி.ஆர்.பி., இணையதளம்

அடிப்படையான எந்த தகவலும் இல்லாமல், மொட்டை கடிதம் போல, ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளம் செயல்படுவதால், பணி நியமன தகவல்கள் கிடைக்காமல், பட்டதாரிகளும், ஆசிரியர்களும், அவதிக்கு ஆளாகின்றனர். தமிழக அரசு பள்ளிகளில் ஆசிரியர்களை நியமனம் செய்ய, டி.ஆர்.பி., என்ற ஆசிரியர் தேர்வு வாரியம், சென்னை, டி.பி.ஐ., வளாகத்தில் செயல்படுகிறது. பதினோரு அடுக்கு மாடி கட்டடத்தில், பயன்படுத்தப்படாத கிடங்கு போல, ஆள் அரவமற்ற நிலையில், இந்த அலுவலகம் செயல்படுகிறது. இங்கு செல்லும் பட்டதாரிகள், எந்த தகவல்களை கேட்டாலும், ‘இணையதளத்தை …

TRB : அடிப்படை தகவல் இல்லாத டி.ஆர்.பி., இணையதளம் Read More »

வரலாறு ஆசிரியர் பதவி உயர்வு : மீண்டும் தலைதூக்குது ‘CROSS MAJOR’

அரசுப் பள்ளி முதுநிலை வரலாறு ஆசிரியர் பதவி உயர்வில்மீண்டும் ‘கிராஸ் மேஜர்,’ ‘சேம் மேஜர்’ பிரச்னை தலைதுாக்கியுள்ளது.முதுநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்களில் 50 சதவீதம் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமும், மற்ற பணியிடங்கள் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு மூலமும் நிரப்பப்படும். பதவி உயர்வு மூலம் நிரப்புவதில், வரலாறு முதுநிலை ஆசிரியர்கள் பற்றாக்குறை இருந்தது. இதையடுத்து, இளநிலையில் ஏதாவதொரு பட்டத்தை முடித்து, முதுநிலையில் வரலாறு, புவியியல், பாடப்பிரிவுகளை படித்தோரை (கிராஸ் மேஜர்) மூன்று பங்கும், இளநிலை, முதுநிலை …

வரலாறு ஆசிரியர் பதவி உயர்வு : மீண்டும் தலைதூக்குது ‘CROSS MAJOR’ Read More »

பி.எஸ் – 4 வாகனங்கள் மட்டும் விற்பனை குறித்த : 10 அம்சங்கள்

புதுடில்லி: நாட்டில் இனிமேல், வாகனங்கள் வெளியிடும் புகையை கட்டுப்படுத்தும் வகையில், புகைகக்காத பி.எஸ் – 4 வாகனங்களை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. பி.எஸ்., என்பது, பாரத் ஸ்டேஜ் என்பதின் சுருக்கம். வாகனங்கள் வெளியிடும் புகை மாசு ஏற்படுவதை தடுக்க, இந்தியாவில், 2000ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில், பி.எஸ் – 3 தொழில்நுட்பம், 2005ல் டில்லி, சென்னை உட்பட 13 நகரங்களில் அறிமுகப்படுத்தி, பின்னர் நாடு முழுவதும், 2010ல் விஸ்தரிக்கப்படது. பி.எஸ் …

பி.எஸ் – 4 வாகனங்கள் மட்டும் விற்பனை குறித்த : 10 அம்சங்கள் Read More »

சுப்ரீம் கோர்ட் உத்தரவு எதிரொலி.. டூவீலர் விலையில் வரலாற்று வீழ்ச்சி.. இச்சலுகை 2 நாட்கள் மட்டுமே!

பாரத் ஸ்டேஜ் -4 (பி.எஸ்.4) விதிமுறைகளை பூர்த்தி செய்யாத வாகனங்களை ஏப்ரல் 1 ஆம் தேதிக்கு பிறகு வாகன உற்பத்தி நிறுவனங்கள் விற்பனை செய்ய முடியாது என்று உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவால் அந்த பைக்குகள் விலை கிடுகிடுவென குறைந்துள்ளது. நாட்டில் புகை மாசுவை கட்டுப்படுத்த சுற்றுசூழல் மாசு கட்டுப்பாட்டு ஆணையம், வாகனங்கள் வெளியிடும் மாசுகளின் அளவுகளை வரையறுத்து விதிமுறைகள் வகுத்து வெளியிட்டு வருகின்றன. வாகனங்கள் வெளியிடும் புகையை கட்டுப்படுத்த சில விதிமுறைகளை வகுத்து, பாரத் ஸ்டேஜ் …

சுப்ரீம் கோர்ட் உத்தரவு எதிரொலி.. டூவீலர் விலையில் வரலாற்று வீழ்ச்சி.. இச்சலுகை 2 நாட்கள் மட்டுமே! Read More »

‘நீட்’ தேர்வுக்கு தமிழில் பயிற்சி உண்டா : அரசு பள்ளி மாணவர்கள் தவிப்பு.

பிளஸ் 2 தேர்வு, இன்று முடிய உள்ள நிலையில், ‘நீட்’ தேர்வை எப்படி எழுதுவது என, அரசு பள்ளி மாணவர்கள், தவிப்புக்கு ஆளாகி உள்ளனர். பிளஸ் 2 வகுப்பில், அறிவியல் பிரிவில் படிக்கும் மாணவர்கள், எம்.பி.பி.எஸ்., – பி.டி.எஸ்., படிப்பில், கவுன்சிலிங் மூலம் சேர்க்கப்படுவர்.பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில், தரவரிசை பட்டியல் தயார் செய்யப்பட்டு, மாணவர்களுக்கு கவுன்சிலிங் நடந்து வந்தது. ஆனால், இந்த ஆண்டு முதல், ‘நீட்’ தேர்வு அடிப்படையில் மட்டுமே, எம்.பி.பி.எஸ்., – பி.டி.எஸ்., படிப்பில் …

‘நீட்’ தேர்வுக்கு தமிழில் பயிற்சி உண்டா : அரசு பள்ளி மாணவர்கள் தவிப்பு. Read More »

விடைத்தாள் திருத்தும் பணி குளறுபடி தவிர்க்க கட்டுப்பாடு

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியில் குளறுபடி ஏற்படாமல் தவிர்க்க தேர்வுத்துறை புது கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. பத்தம் வகுப்பு தேர்வு மார்ச் 28 ல் முடிந்தது; இன்று பிளஸ் 2 தேர்வு முடிகிறது. இன்றே விடைத்தாள் திருத்தும் பணியும் துவங்குகிறது. கடந்த காலங்களில் பல குளறுபடிகள் அரங்கேறின.விடைக்குறிப்பின்படி வழங்கப்பட்ட அதிகபட்ச மதிப்பெண்ணை விட, விடைத்தாளில் கூடுதல் மதிபெண் கொடுத்தது, சில பக்கங்களை திருத்தாமலும், மதிப்பெண்ணை அதற்குரிய ‘காலத்தில்’ எழுதாமலும் விட்டது என பல தவறுகள் …

விடைத்தாள் திருத்தும் பணி குளறுபடி தவிர்க்க கட்டுப்பாடு Read More »

‘NEET’ தேர்வு எழுதுபவரா நீங்கள்? : ‘தினமலர்’ வழங்கும் மாதிரி வினா-விடை

நீட்’ – ‘நேஷனல் எலிஜிபிலிட்டி கம் என்ட்ரன்ஸ் டெஸ்ட்’ என்பது, 2013ல் மத்திய அரசு அறிமுகம் செய்த, மருத்துவப் படிப்புக்கான, தகுதி மற்றும் தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு. முக்கியத்துவம் : நாடு முழுவதும் உள்ள அரசு, தனியார் மற்றும் நிகர்நிலை மருத்துவக் கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., – பி.டி.எஸ்., படிப்புகளில் சேர்வதற்கு, ‘நீட் யு.ஜி.,’ – 2017 நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. சி.பி.எஸ்.இ., இந்த தேர்வை நடத்துகிறது. தேர்வில், மாணவர்கள் பெறும் மதிப்பெண் அடிப்படையில், இடம் ஒதுக்கப்படுகிறது. மாநிலங்களில் …

‘NEET’ தேர்வு எழுதுபவரா நீங்கள்? : ‘தினமலர்’ வழங்கும் மாதிரி வினா-விடை Read More »

அங்கீகாரமில்லாத மனைகள் வரன்முறைக்கு அரசு புதிய திட்டம்

தமிழகத்தில், 2016, அக்., 20க்கு முன் உருவான அங்கீகாரமில்லா மனைகளை, ஆறு மாத காலத்திற்குள் வரன்முறை செய்யும், அரசின் புதிய திட்டம் இறுதி வடிவம் பெற்றுள்ளது. தமிழகத்தில் அங்கீகாரமில்லா மனைகள் விற்பனை பதிவுக்கு விதிக்கப்பட்ட தடையில் சில பகுதிகள் தளர்த்தப்பட்டுள்ளன. இதன் பின்னணியில், அங்கீகாரமில்லா மனைகளை வரன்முறை செய்யும் திட்டத்தை, தமிழக அரசு இறுதி செய்து உள்ளது. இதன்படி, பதிவு சட்டத்தில், 22 – ஏ பிரிவு திருத்தத்தை அமல்படுத்த அரசாணை பிறப்பிக்கப்பட்ட, 2016 அக்., 20ஐ, …

அங்கீகாரமில்லாத மனைகள் வரன்முறைக்கு அரசு புதிய திட்டம் Read More »

சான்றிதழ்களில் பாதுகாப்பு அம்சம் : ஆதார் எண் இணைக்க அறிவுரை

பல்கலைகள், கல்லுாரிகளின் பட்ட சான்றிதழ்களில், ஆதார் எண் உட்பட பாதுகாப்பு அம்சங்கள் இடம் பெற வேண்டும்’ என, பல்கலை மானியக்குழுவான, யு.ஜி.சி., உத்தரவிட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில், போலி சான்றிழ்கள், போலி அரசாணைகள், போலி உத்தரவுகள் மூலம், வேலையில் சேர்வது அதிகரித்துள்ளது. அதேபோல், சான்றிதழ்களில் மதிப்பெண் உள்ளிட்ட விபரங்களும் திருத்தப்படுகின்றன. இதை தடுக்க, ஒவ்வொரு கல்வி நிறுவனமும், பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்கின்றன. இந்நிலையில், அனைத்து கல்லுாரி, பல்கலைகளுக்கு, யு.ஜி.சி., செயலர் ஜஸ்பால் சந்து அனுப்பிய …

சான்றிதழ்களில் பாதுகாப்பு அம்சம் : ஆதார் எண் இணைக்க அறிவுரை Read More »

PGTRB : 2,100 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் எழுத்து தேர்வு மூலம் நியமனம் – விரைவில் அறிவிப்பு வெளியாகிறது

எழுத்து தேர்வு மூலம் 2,100 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகிறது. 2,100 காலிப்பணியிடங்கள் தமிழ்நாடு முழுவதும் 3 ஆயிரத்து 600 அரசு மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் 2,100 முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்த பணியிடங்களை நிரப்ப வேண்டும் என ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் 3 முறை பள்ளிக்கல்வித்துறை சார்பில் கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது. தகுதி தேர்வு இதையொட்டி 2,100 ஆசிரியர்களை எழுத்து தேர்வு மூலம் …

PGTRB : 2,100 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் எழுத்து தேர்வு மூலம் நியமனம் – விரைவில் அறிவிப்பு வெளியாகிறது Read More »

TN Lab Assistant Selection ” Weightage Calculation Method ” | ஆய்வக உதவியாளர் பணிக்கான வெயிட்டேஜ் கணக்கிடும் முறை

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 4,500 ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கு கடந்த 2015-ஆம் ஆண்டில் நடைபெற்ற எழுத்துத் தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டன. ஆய்வக உதவியாளர் பணியிடங்களை, அந்தந்த மாவட்டங்களில் காலிப் பணியிடங்களுக்கு தகுந்த வகையில், நேர்முகத் தேர்வு மூலம் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக, எழுத்துத் தேர்வில் தேர்வானவர்கள் குறித்த பட்டியல், ஏப்ரல் 1,2ஆம் தேதிகளில், அந்தந்த முதன்மைக் கல்வி அலுவலகங்களில் ஒட்டப்படும். உரியவர்களுக்கு அழைப்புக் கடிதமும் அனுப்பி வைக்கப்படும். காலியிடத்துக்கு தகுந்தாற் போல், …

TN Lab Assistant Selection ” Weightage Calculation Method ” | ஆய்வக உதவியாளர் பணிக்கான வெயிட்டேஜ் கணக்கிடும் முறை Read More »

1,100 உடற்கல்வி, ஓவிய ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்:பள்ளிக் கல்வித் துறை இயக்குநர்

தமிழகப் பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம், இசை, தையல் ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளதாக, பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன் தெரிவித்தார். அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம், விழுப்புரம் கல்வி அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இதில், பங்கேற்ற பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 600 உடற்கல்வி ஆசிரியர்கள், 300 ஓவிய ஆசிரியர்கள், இசை ஆசிரியர்கள் 100, தையல் ஆசிரியர்கள் 100 பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளன என்றார். …

1,100 உடற்கல்வி, ஓவிய ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்:பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் Read More »

அரசு ஊழியர்களுக்கு வங்கிக் கணக்கு இருப்பு கட்டுப்பாட்டில் இருந்து விலக்கு: தமிழக அரசு தகவல்

பாரத ஸ்டேட் வங்கியின் மின்னணு வங்கிச் சேவை வழியாக மாத ஊதியம் பெறும் அரசு ஊழியர்களுக்கு வங்கிக் கணக்கு இருப்பு கட்டுப்பாட்டில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான தகவல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக அரசுத் துறைவட்டாரங்கள் தெரிவித்தன. பாரத ஸ்டேட் வங்கியில் சேமிப்புக் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் வரும் 1 ஆம் தேதி முதல் தங்களது கணக்குகளில் ரூ.5 ஆயிரம் (பெருநகரம்), ரூ.3 ஆயிரம் (நகரங்கள்), ஆயிரம் ரூபாய் (கிராமங்கள்) வரை இருப்பு வைக்க வேண்டுமென …

அரசு ஊழியர்களுக்கு வங்கிக் கணக்கு இருப்பு கட்டுப்பாட்டில் இருந்து விலக்கு: தமிழக அரசு தகவல் Read More »

என்ஜினீயரிங் படிப்புக்கு ஏப்ரல் 2-வது வாரத்தில் விண்ணப்பம் அண்ணா பல்கலைக்கழக அதிகாரி தகவல்.

என்ஜினீயரிங் படிப்புக்கு ஏப்ரல் 2-வது வாரத்தில் விண்ணப்பம் வெளியிடப்படும் என்று அண்ணா பல்கலைக் கழக அதிகாரி தெரிவித்தார். என்ஜினீயரிங் கல்லூரிகள் தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவி பெறும் என்ஜினீயரிங் கல்லூரிகள், சுயநிதி என்ஜினீயரிங் கல்லூரிகள் சேர்த்துமொத்தம் 554 உள்ளன. அரசு கல்லூரிகளில் உள்ள 100 சதவீத இடங்கள் அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும். தனியார் மற்றும் சுயநிதி கல்லூரிகள் 65 சதவீத இடங்களை அண்ணா பல்கலைக்கழக கலந்தாய்வுக்கு வழங்க வேண்டும். ஆனால் சிறுபான்மையினர்நடத்தும் கல்லூரிகளாக …

என்ஜினீயரிங் படிப்புக்கு ஏப்ரல் 2-வது வாரத்தில் விண்ணப்பம் அண்ணா பல்கலைக்கழக அதிகாரி தகவல். Read More »

2804 கிராமப்புற செவிலியர் பணியிடம்: ஏப்.3 முதல் சான்றிதழ் சரிபார்ப்பு.

கிராமப்புற செவிலியர் பணியிடங்களுக்குத் தேர்வு செய்யப்பட்டோருக்கான சான்றிதழ் சரிபார்க்கும் பணிகள் ஏப்ரல் 3 -ஆம் தேதி தொடங்கவுள்ளது. தமிழகத்தில் 2,804 தாற்காலிக கிராமப்புற சுகாதார செவியர்கள் பணியிடங்கள், மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நிரப்பப்படவுள்ளன. இதன்படி, மதிப்பெண் மற்றும் இடஒதுக்கீட்டின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டுள்ள 1,183 பேர்களின் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இவர்களுக்கு சான்றிதழ் சரிபார்க்கும் பணி ஏப்ரல் 3 -ஆம் தேதி முதல் 8 -ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். …

2804 கிராமப்புற செவிலியர் பணியிடம்: ஏப்.3 முதல் சான்றிதழ் சரிபார்ப்பு. Read More »

Scroll to Top