பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளன.
இது குறித்து, அரசு தேர்வுத் துறை இயக்குனர், வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பத்தாம் வகுப்புக்கான துணைத் தேர்வுகள், அக்டோபரில் நடத்தி முடிக்கப்பட்டன. இதில், பங்கேற்ற தேர்வர்கள், தங்களின் தேர்வு முடிவுகளை, www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். தற்காலிக மதிப்பெண் சான்றிதழையும் பதிவிறக்கம் செய்யலாம்.மறுகூட்டலுக்கு விண்ணப் பிக்க விரும்புவோர், 31 மற்றும் நவ., 1ல், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில்,பதிவு செய்ய வேண்டும். விண்ணப்பிக்கும் போது வழங்கப்படும் ஒப்புகை சீட்டை, பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.