சென்னை, ‘அரசு சட்ட கல்லுாரிகளில், மூன்று ஆண்டு, எல்.எல்.பி., படிப்புக்கு, அக்., ௯ல் மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் துவங்கும்’ என, அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு அம்பேத்கர் சட்ட பல்கலை கட்டுப்பாட்டில், ஏழு அரசு சட்ட கல்லுாரிகள் உள்ளன.
இவற்றில், மூன்று ஆண்டு, எல்.எல்.பி., படிப்புக்கு, ௧,௦௫௨ இடங்களில் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.இந்த ஆண்டு, மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல், நேற்று வெளியிடப்பட்டது. மாணவர்களின், ‘கட் ஆப்’ மதிப்பெண் பட்டியல், www.tndalu.ac.in என்ற, இணையதளத்தில் வெளியிடப்பட்டுஉள்ளது. மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், அக்., ௯ல் துவங்கி, ௧௪ல் முடியும் என, மாணவர் சேர்க்கை தலைவர், பேராசிரியர் பாலாஜி தெரிவித்துள்ளார்.