முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியடங்களுக்கு நாளை தேர்வு

தமிழக அரசு மேல்நிலைப் பள்ளிகளில், காலியாக உள்ள, 1,663 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் நிலை – 1 இடங்களை நிரப்ப, நாளை(ஜூலை 2), தமிழகம் முழுவதும் போட்டி தேர்வு நடத்தப்படுகிறது.

இந்த அறிவிப்பு வெளியான பின், கூடுதல் காலி பணியிடங்களில் ஆட்களை நியமிக்க, அரசு அனுமதி அளித்தது. இதற்கான அரசாணை, நேற்று முன்தினம் வெளியானது. இதை தொடர்ந்து, நாளை நடக்கவுள்ள போட்டி தேர்வு மூலம், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட, 1,663 இடங்களுடன், கூடுதலாக, 1,712 இடங்கள் சேர்த்து, 3,375 பணியிடங்கள் நிரப்பப்படும் என, டி.ஆர்.பி., பொறுப்பு தலைவர் ஜெகநாதன் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top