மாவட்டந்தோறும் உதயமாகிறது “ஜவஹர் நவோதயா பள்ளிக்கூடம்” விரைவில் அறிவிப்பு வெளியாகிறது !!

மத்திய அரசின் நிதி உதவியின் கீழ் செயல்படும் “ஜவஹர்நவோதயா பள்ளிக்கூடங்கள்” தமிழகத்தில் மாவட்டந்தோறும் விரைவில் அமைக்கப்பட உள்ளது.

இதற்கான அறிவிப்பை தமிழக அரசு விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த பள்ளியை நிர்வகிக்கும் நவோதயா வித்யாலயா சமிதிஅமைப்பு, சமீபத்தில் விடுத்த அறிக்கையின்படி, “தமிழகத்தில் இந்தி மொழி கட்டாயப்பாடமாக இருக்காது.

மாணவர்கள் விருப்பத்தின் அடிப்படையில் படிக்கலாம்” எனத் தெரிவித்துள்ளது. ஆதலால், தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் திறப்பதில் பெருமளவு தடைகள் ஏதும் இருக்காது எனத் தெரிகிறது.மேலும், மாவட்டந்தோறும் நவோதயா பள்ளிகளுக்கான நிலம் ஒதுக்கீடு, மாநில அரசின் கல்விக்கொள்கை உள்ளிட்ட விவரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.மாவட்டத்துக்கு ஒரு பள்ளி வீதம் 32 மாவட்டங்களிலும் நவோதயா பள்ளிக்கூடம் தொடங்கப்படலாம் என பள்ளிக்கல்வி துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.தமிழக அமைச்சரவை விரைவில் கூட உள்ளநிலையில், அப்போது, இந்த விவகாரம் குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் எனத் தெரிகிறது.கடந்த 1986ம்ஆண்டு நவோதாயா பள்ளிக்கூடம் திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து நாடுமுழுவதும் 600 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.ஆனால், தமிழகத்தில் இன்னும் ஒரு நவோதாயா பள்ளிக்கூடம் கூட வரவில்லை. இந்த பள்ளிக்கூடங்களுக்கு இந்திக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது என்ற காரணத்தால் தமிழகத்தில் இந்த பள்ளிகளுக்கு அரசியல் கட்சிகளால் தடைபோடப்பட்டு வந்தது.

நவோதயா பள்ளிகளில் ஆங்கிலம், இந்தி, மற்றும் மாநில மொழி கற்பிக்கப்படுகிறது. தமிழகத்தில் தற்போது இரு மொழி(தமிழ்,ஆங்கிலம்)கல்விக் கொள்கை பின்பற்றப்பட்டு வருகிறது. கடந்த 1930-களில் இருந்து இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் இருந்து இந்தி மொழியை தமிழகத்தில் கற்பிக்க கடும் எதிர்ப்புஇருந்து வருகிறது.இது குறித்து கல்வியாளர்கள் கூறுகையில், நவோதயா பள்ளிக்கூடத்தை எதிர்ப்பதன் மூலம்,தமிழகம் தரமான கல்வியை அளிக்கும் மற்றொரு இடத்தை தவறவிடும். 4-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை நவோதயா பள்ளிகளில் பிரதானமொழியாக தாய்மொழி அல்லது மாநில தான் கற்பிக்கப்படும்.

தமிழகத்தைப் பொருத்தவரை தமிழ் மொழிதான் இருக்கும் என்கின்றனர்.தமிழக பள்ளிக்கல்வித்துறையில் மூத்த அதிகாரி ஒருவர்கூறுகையில், நவோதயா பள்ளிக்கூடம் வந்தால், 10ம் வகுப்பு, 11ம் வகுப்பில் கூட தமிழ் தொடர்ந்து கற்பிக்கப்படும். நவோதா பள்ள நிர்வாகம் தமிழ் கற்பிக்கும் சட்டத்தை மீறாது. தற்போது தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பின்பற்றப்படும் தமிழ், ஆங்கில மொழியே 8-ம் வகுப்பு வரை கற்பிக்கப்படும்.

உயர்நிலை,மேல்நிலைக்கு செல்லும் போது மட்டுேம, ஆங்கில வழியில் பாடங்கள் கற்பிக்கப்படும். ஆதலால், இதை எதிர்க்க எந்த விதமான காரணமும் இல்லை” என்றார்.இந்த நவோதயா பள்ளிகளுக்கு 32 மாவட்டங்களில் தலா 15 ஏக்கர் நிலம் ஒதுக்கப்படும். ஒவ்வொரு பள்ளிக்கூடத்துக்கும் தலா ரூ.20 கோடி வீதம், ரூ.320கோடி மத்திய அரசு சார்பில்அளிக்கப்படும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top