மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு விருதுகள்: ஜூலை 14-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக செயல்பட்ட தொண்டு நிறுவனம், மருத்துவர் உள்ளிட்ட 6 விருதுகளுக்குஜூலை 14-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.இது தொடர்பாக மாற்றுத்திறனாளிகள் நலத்துறை வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மாநில அளவில் சிறப்பாக பணியாற்றுவோர் மற்றும் நிறுவனங்களை கவுரவிக்கும் விதமாக, சுதந்திர தினத்தன்று பல்வேறு விருதுகள் வழங்கப்படுகின்றன.

இதன்படி, மாற்றுத்திறனாளி கள் நலனுக்கு பணியாற்றிய சிறந்த மாவட்ட ஆட்சியர், மாற் றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த தொண்டு நிறுவ னம், சிறந்த மருத்துவர், அதிக வேலைவாய்ப்பளித்த தனியார் நிறுவனம், சேவை புரிந்த சிறப்பு சமூகப் பணியாளர், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஆகிய 6 விருதுகள் வழங்கப்படுகின்றன. இதில் சிறந்தமாவட்ட ஆட்சியருக்கு 10 கிராம் தங்கப் பதக்கம், ரூ.25 ஆயிரம் ரொக்கப்பரிசு மாவட்ட ஆட்சியர் மாநாட்டில் வழங்கப்படும். சிறந்த தொண்டு நிறுவனத்துக்கு 10 கிராம் தங்கப் பதக்கம், ரூ.50 ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்கப்படும். மற்றவர் களுக்கு, 10 கிராம் தங்கப் பதக்கம், சான்றிதழ் வழங்கப்படும்.

இந்த விருதுகள் பெற மாற்றுத்தினாளிகளுக்கான மாநில ஆணையர், மாநில ஆணையரகம், லேடி வெலிங்டன் கல்லூரி வளாகம், திருவல்லிக்கேணி என்ற முகவரியில் அல்லது அந்த மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரிடம் விண்ணப்பம் பெற்று உரிய சான்றிதழ்களுடன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவல ரிடம் பரிந்துரைப் பெற்று, மாற் றுத்திறனாளிகள் மாநில ஆணைய ருக்கு ஜூலை 14-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். விண்ணப் பங்களை ‘www.scd.tn.gov.in’ என்ற இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்யலாம்.இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top