மாணவர்களுக்கு காமராஜர் விருது

தமிழக பாடத்திட்டத்தில், பிளஸ் 2 மற்றும், 1௦ம் வகுப்பு பொதுத் தேர்வில், மாநில, மாவட்ட அளவில், முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு, தமிழக அரசு உதவித்தொகை வழங்குகிறது. ‘ரேங்கிங்’ முறை ரத்து செய்யப்பட்டதால், இந்த உதவித்திட்டம் முடங்கியது.தற்போது, அரசு பள்ளிகளில், தமிழ் வழியிலும் படிக்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், காமராஜர் விருது வழங்க, பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது. இதற்கான பட்டியல் தயாரிப்பு, பள்ளி வாரியாக நடக்கிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும், 15 மாணவர்கள், பிளஸ் 2 மற்றும், 1௦ம் வகுப்பில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

‘அரசு பள்ளிகளில், தமிழ் வழியில் படித்து, பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் எடுப்பதுடன், தனித்திறன் போட்டிகள், அறிவியல் கண்காட்சி, நாட்டு நலப்பணித் திட்டம், சாரண, சாரணியர் இயக்கம் போன்றவற்றின் செயல்பாடுகளும், விருதுக்கான தகுதி மதிப்பெண்ணில் சேர்க்கப்படும்’ என, அதிகாரிகள் தெரிவித்தனர்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top