சிவகங்கை ஜாக்டோ – ஜியோ போராட்டத்தின் தொடர்ச்சியான காத்திருப்பு போராட்டத்தில் (7ம் நாளாகிய இன்று) 58 வயதுக்கு பிறகு பென்சன் இல்லை என்றால் அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் மாட்டு வண்டி ஒட்டித்தான் பிழைப்பு நடத்த வேண்டும் என்றும்,அரசாங்கத்துக்கு தனது முழு உழைப்பையும் கொடுத்து விட்டு மாட்டு வண்டி ஒட்டகூட உடம்பில் தெம்பு இல்லாமல் மிக மோசமான நிலைக்கு தள்ளப்படுவார்கள் என்று கோஷமிட்டு வித்தியாசமான முறையில் அரசு ஊழியர் சங்கத்தின் நிர்வாகியும் ,வட்டாட்சியருமான தமிழரசன் கோசம் எழுப்பி போராட்ட குழுவினருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாட்டு வண்டி ஒட்டிக்கொண்டு வந்து கோஷமிட்டார். இந்த நிகழ்வு அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.அதன் பிறகு பல்லாயிரக்கணக்கான போராட்டக்கார்கள் காத்திருப்பு போராட்டத்தில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
