மனிதநேயம் அகாடமியில் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு இலவச பயிற்சி

மனிதநேய அறக்கட்டளை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
சமுதாயம் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் படிக்க மனிதநேய அறக்கட்டளை மூலம் ஐஏஎஸ் அகாடமி தொடங்கப்பட்டு, ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற தேர்வுகளுக்கு இலவச பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
மேலும் தமிழ்நாடுஅரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்1, 2 போன்ற தேர்வுகளுக்கும் இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. இதுவரை 2955-க்கும் மேற்பட்டோர் பல உயர் பதவிகளுக்கு தேர்ச்சி பெற்றுள்ளனர்.அதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு அரசு பணியாளர்தேர்வாணையம் நடத்தும் அனைத்து தேர்வுகளுக்கும் பயிற்சி பெற விரும்புவோருக்கு இலவச பயிற்சி வழங்கப்படவுள்ளது. இதில் கலந்துகொள்ள விரும்புவோர், பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் சிஐடி நகர், முதல் பிரதான சாலையில் உள்ள மனிதநேய அறக்கட்டளை அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை முதல் நேரில் பதிவு செய்ய வேண்டும். பிற மாவட்ட மாணவர்கள் www.saidais.com என்ற இணையதளத்திலும் பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top