7வது ஊதியக்குழு பரிந்துரைப்படி மத்திய, மாநில பல்கலைக்கழக உதவி, இணை பேராசிரியர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பல்கலை கழக உதவி மற்றும் இணை பேராசியர்களுக்கு ஊதிய உயர்வு அளிப்பது குறித்து மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று கூடியது. அதில், 7வது ஊதியக்குழு பரிந்துரை குறித்து விவாதிக்கப்பட்டது. இதையடுத்து, 7வது ஊதியக்குழு பரிந்துரைப்படி மத்திய, மாநில பல்கலைக்கழக உதவி, இணை பேராசிரியர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மேலும் 329 மாநில 12,912 மத்திய பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கப்படவுள்ளது.
22% முதல் 28% வரை ஊதியம் உயர்த்தி வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஊதிய உயர்வு மூலம் 7.51 லட்சம் பேராசிரியர்கள் பயனடைவார்கள் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.