பி.எஸ்சி., நர்சிங்: 19ம் தேதி கவுன்சிலிங்

பி.எஸ்சி., நர்சிங், பி.பார்ம்., உள்ளிட்ட துணை மருத்துவ படிப்புகளுக்கு, வரும், 19ல் கவுன்சிலிங் துவங்குகிறது. இதற்கான தகுதி பட்டியல், வெளியிடப்பட்டு உள்ளது.

தமிழகத்தில், பி.எஸ்சி., நர்சிங் – பி.பார்ம்., உள்ளிட்ட ஒன்பது, துணை மருத்துவ படிப்புகளுக்கு, அரசு மற்றும் சுயநிதி கல்லுாரிகளில், 8,000 இடங்களுக்கு மேல் உள்ளன.

இதற்கு, 26 ஆயிரத்து, 460 பேர் விண்ணப்பித்தனர். அதில், 25 ஆயிரத்து, 293 பேருக்கான தகுதிப்பட்டியல், www.tnhealth.org, www.tnmedicalselection.org என்ற இணையதளங்களில், நேற்று வெளியிடப்பட்டது.இதற்கான முதற்கட்ட கவுன்சிலிங், சென்னை அரசு பல்நோக்கு மருத்துவமனையில், வரும், 19ல் துவங்கி, அக்., 7 வரை நடக்கும் என, மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top