பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் 192 என்ஜினியர் வேலை!!!

பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் 192 என்ஜினியர் வேலை!!!

பொதுத்துறை நிறுவனமான “Bharat Electronics Limited” நிறுவனத்தில் காலியாக உள்ள துணை பொறியாளர்கள் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Deputy Engineer

காலியிடங்கள்:
192

துறைவாரியான காலியிடங்கள் விவரம்:

1. எலக்ட்ரானிக்ஸ் – 184
2. மெக்கானிக்கல் – 08

சம்பளம்: மாதம் ரூ.16,400 – 40,500

வயதுவரம்பு: 26க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல் மற்றும் கம்யூனிகேசன், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் டெலிகம்யூனிகேசன், கம்யூனிகேசன், மெக்கானிக்கல் போன்ற துறைகளில் பி.இ அல்லது பி.டெக் முடித்து 1 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

தேர்வு மையங்கள்: பெங்களூரு, தில்லி, முப்பை, கொல்கத்தா, குவாகத்தி. நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்படுபவர்களுக்கு படுக்கை வசதிகொண்ட ரயில் கட்டணம் வழங்கப்படும்.

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 26.11.2017

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500. இதனை ஆன்லைன் முறையிலும் செலுத்தலாம். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: www.bel-india.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி:
25.10.2017

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.bel-india.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top