பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளராக பிரதீப் யாதவ் நியமனம் – உதயசந்திரன் மாற்றமில்லை

பள்ளிக்கல்வித்துறையின் முதன்மைத்துறை செயலாளராக பிரதீப் யாதவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
பள்ளிக்கல்வித்துறைக்கு தற்காலிக முதன்மை செயலாளர் என்ற பணியிடம் உருவாக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு

பள்ளிக்கல்வித்துறையின் முதன்மைத்துறை செயலாளராக பிரதீப் யாதவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். உதயசந்திரன் பள்ளிக்கல்வித்துறை செயலாளராக நீடிக்கிறார். அவர் நீக்கப்படவில்லை. உதயசந்திரன் இனி முதன்மை செயலரின் கீழ் செயல்படுவார். உதயசந்திரன் ஐஏஎஸ் மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியானதை அடுத்து அவருக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் பலரும் கருத்துக்களை பதிவிட்டனர். இந்த நிலையில் உதயசந்திரனை ஐஏஎஸ்ஐ மாற்றாமல் அவருக்கு மேல் அதிகாரி ஒருவரை நியமித்துள்ளது அரசு.

இதனிடையே மாவட்ட ஆட்சியர்கள் சிலரும் மாற்றப்பட்டுள்ளனர். சேலம் மாவட்ட ஆட்சியராக இருந்த சம்பத் மாற்றப்பட்டுள்ளார். சமூக பாதுகாப்பு திட்ட இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக சேலம் மாவட்ட ஆட்சியராக ரோகிணி நியமிக்கப்பட்டுள்ளார். கடலூர் மாவட்ட ஆட்சியர் ராஜேஷ் மாற்றப்பட்டுள்ளார். புதிய ஆட்சியராக பிரசாந்த் நியமனம். சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மலர்விழி மாற்றம் புதிய ஆட்சியராக லதா நியமனம். சென்னை மாநகராட்சி துணை ஆணையர் கந்தசாமி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக நியமனம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top