கல்வி செயலாளர் உதயசந்திரன் நீக்கப்படவில்லை - சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்

படிக்கும்போது எனக்கு கல்விக் கடன் மறுக்கப்பட்டது; ஆட்சியரானதும் ரூ.110 கோடி வழங்கினேன்- பள்ளிக்கல்வித்துறை செயலர் திரு.உதயசந்திரன் அவர்கள் உருக்கம்

நான் படிக்கும்போது பல்வேறு காரணங்களால் எனக்கு கல்விக் கடன் மறுக்கப்பட்டது. அதன் பிறகு, ஈரோடு ஆட்சியராக பொறுப்பேற்றபோது, ஒரே ஆண்டில் ரூ.110 கோடி கல்விக் கடன் வழங்க நடவடிக்கை எடுத் தேன் என பள்ளிக் கல்வித்துறை செயலாளர் டி.உதயசந்திரன் தெரிவித்தார்.

ஈரோட்டில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

ஈரோட்டில் உள்ள சாலை மற்றும் போக்குவரத்து பொறியி யல் கல்லூரியில் 1989 1993-ம் ஆண்டு பயின்ற மாணவ, மாணவி யர்களின் 25-ம் ஆண்டு நிறைவு வெள்ளிவிழா நேற்று நடந்தது. விழாவில், பள்ளிக் கல்வித்துறை செயலாளர் டி.உதயசந்திரன் பேசியதாவது:

கடந்த 1989-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் நாள் இந்த கல்லூரியில் சேர்ந்தேன். நான் விரும்பிய கல்லூரி கிடைக் காமல் சாலை மற்றும் போக்கு வரத்து கல்லூரியில் என் விருப்பத்துக்கு மாறாக என் பெற்றோர் சேர்த்தனர். இத்தனை ஆண்டுகள் கழித்து நான் திரும்பி இந்த கல்லூரிக்கு முன்னாள் மாணவனாக வரும் போது, அன்றைய நாட்களில் நான்கண்ட கனவுகளில் சில வற்றை செயல்படுத்திட, இந்த கல்லூரி அடித்தளமிட்டுள்ளதை பெருமிதமாக கருதுகிறேன்.

என்னுடைய தந்தை நாமக்கல் லில் பாரத ஸ்டேட் வங்கியில் எனக்காக கல்விக் கடன் வாங்க சென்றபோது பல்வேறு காரணங் களால் கல்விக் கடன் மறுக்கப்பட் டது. அதனை நினைவில் கொண்டு நான் 2007-ல் ஈரோடு மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியராக இருந்தபோது, ஒரே ஆண்டில் ரூ.110 கோடியை கல்விக் கடனாக மாணவர்களுக்கு வழங்கினேன்.

நான் இந்த கல்லூரியில் 2-ம் ஆண்டு படிக்கும்போதே குடிமை பணி (சிவில் சர்வீஸ்) தேர்வு எழுத தீர்மானித்தேன். என்னுடன் விடுதியில் தங்கியிருந்த ஒரு சில நண்பர்கள் எனக்கு உறுதுணை யாக இருந்தனர். அதில் சிலர் என்னை அப்போதே ‘ஜில்லா கலெக்டர்’ என்றே அழைப்பர். பின்னாளில் அவை அனைத்தும் நனவானது. இதே நாள் 1995 ஜூன் 23-ல் இந்திய ஆட்சிப் பணி தேர்வு எழுதி அன்றைய தினம் அதில் நான் இந்திய அளவில் 38-ம் இடம் பெற்று தேர்ச்சி பெற்றேன். இவ்வாறு அவர் கூறினார்.

கல்லூரி வெள்ளி விழாவில் 1989-1993ல் பயின்ற பல்வேறு துறைகளைச் சார்ந்த சுமார் 110 மாணவ, மாணவியர்கள் குடும் பத்தினருடன் கலந்துகொண்டு தங்களது கல்லூரி நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top