பங்களிப்பு ஓய்வூதியம்: தமிழக அரசு விளக்கம்

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பணியாளர்கள், அரசின் தொகைககள் வட்டியுடன் அரசுக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

இதுகுறித்து, நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க.சண்முகம் வியாழக்கிழமை வெளியிட்ட விளக்கம்:

அரசு பணியாளர்களிடம் இருந்து புதிய ஓய்வூதியத் திட்டத்துக்கு பங்களிப்பாக அடிப்படை ஊதியம், அகவிலைப்படியில் 10 சதவீதம் பிடித்தம் செய்யப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், அரசு அதற்குச் சமமான பங்குத் தொகையைச் செலுத்துகிறது.இத்திட்டத்தின் கீழ், கடந்த மார்ச்சுடன் முடிவடைந்த காலத்தில் சுமார் 4 லட்சத்து 62 ஆயிரத்து 327 அரசு, உள்ளாட்சி அமைப்புகள், அரசு உதவி பெறும் கல்வி நிறுவனப் பணியாளர்களின் பங்களிப்புத் தொகை, அரசின் பங்களிப்பு, வட்டி உள்பட மொத்தம் ரூ.18 ஆயிரத்து 16 கோடி பொதுக் கணக்கில் வைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு பணியாளரும் அவரது பங்களிப்பு ஓய்வூதியத் திட்டக் கணக்கில் எவ்வளவு தொகை உள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம். பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பணி ஓய்வு பெற்றவர்கள், பணிதுறப்பு,இறந்த 3 ஆயிரத்து 288 பேருக்கு இறுதியாகச் சேர வேண்டிய ரூ.125.24 கோடியை வழங்க அரசு அனுமதித்துள்ளது.எனவே, பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பணியாளர்களின் பங்குத் தொகை, அரசு பங்களிப்பு ஆகியன வட்டியுடன் அரசின் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top