‘நீட்’ தேர்வு எழுதி ரேங்க் பெற்ற மாணவர்களுக்கு ‘சீட்’ எப்படி?

மருத்துவம், பல் மருத்துவ சீட்களுக்காக, ‘நீட்’ தேர்வு எழுதி ரேங்க் பெற்ற மாணவர்களுக்கு, அரசு கோட்டாவில், ‘சீட்’ கிடைக்குமா, இல்லையா; ‘சீட்’ பெறுவது எப்படி? என்பது போன்ற பல விதமான கேள்விகளுக்கு விரைவில் விடை கிடைக்கும்.

மத்திய உயர் கல்வி தேர்வாணையம் – சி.பி.எஸ்.இ., மே, 7ம் தேதி நடத்திய தேசிய தகுதி மற்றும் நுழைவு தேர்வில், பெங்களூரு, டில்லி பப்ளிக் பள்ளி மாணவர் சங்கீர்த் சதானந்த், 720 மதிப்பெண்ணுக்கு, 692 மதிப்பெண்ணுடன்,நான்காவது ரேங்க் பெற்று, சாதனை புரிந்துள்ளார்.பெங்களூரை சேர்ந்த மற்றொரு மாணவியான ரக் ஷிதா ரமேஷ், 677 மதிப்பெண்ணுடன், 41வது இடத்தை பிடித்தார். மருத்துவ படிப்பில், மாநிலத்துக்கான, ‘கட் ஆப்’ மார்க், மருத்துவ கல்வி இயக்குனரகத்தின் மூலம், கர்நாடகா தேர்வாணையம் – கே.இ.ஏ.,வுக்கு வரும்; அதன் பின் கே.இ.ஏ., அறிவிக்கும். சி.பி.எஸ்.இ., வழங்கும், ‘கட் ஆப்’ மார்க் அடிப்படையில், மாணவர்களுக்கு உத்தரவிடப்படும். அதன் பின் ஆவணங்களை பரிசீலிப்பது, ‘சீட்’ வழங்கும் செயல்பாடு கே.இ.ஏ., மூலமாக நடக்கும். பொதுப்பிரிவு, எஸ்.சி., – எஸ்.டி., என அந்தந்த பிரிவு வாரியாக பிரிக்கப்படும்.அரசு கோட்டாவில் மருத்துவம், பல்மருத்துவ படிப்புக்கு இருப்புள்ள சீட்டுகள் பற்றி, விரைவில் அறிவிக்கப்படும். தனியார் பல்கலைக்கழகம், தனியார் கல்லுாரிகளில் உள்ள மருத்துவ சீட்டுகள் குறித்து இன்னும்தெரியவில்லை.

‘நீட்’ தேர்வில், நல்ல ரேங்க் பெற்ற மாணவர்களுக்கு, நாட்டின் பிரபல மருத்துவ கல்லுாரிகளில், எளிதாக, ‘சீட்’கிடைத்து விடும்.மாணவர்களுக்கு பிரச்னை ஏற்படக்கூடாது என்பதற்காக, தகுதி தேர்வை தவிர, மருத்துவ படிப்புகளுக்கான கட்டணம்,’சீட்’ வழங்குவது, கல்லுாரி நுழைவு, ஆவணங்களை பரிசீலிப்பது என அனைத்தும், மாநில அரசு மூலமாகவே நடத்தப்படும்.சி.இ.டி., மற்றும், ‘நீட்’ தேர்வு எழுதிய மாணவர்களின் ஆவணங்களை பரிசீலிப்பதில், எந்த பிரச்னையும் இல்லை. ரேங்க் அடிப்படையில், கே.இ.ஏ., ஆவணங்களை பரிசீலிக்கும் பணியை துவக்கியுள்ளது.

‘நீட்’ எழுதிய, சி.இ.டி., எழுதாத மாணவர்கள், கே.இ.ஏ., இணையதள மான, www.kea.kar.nic.in பதிவு செய்து கொள்ளும்படி, கர்நாடக மாநில மருத்துவக் கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.சி.பி.எஸ்.இ., ‘கட் ஆப் மார்க்’வழங்கிய பின், பதிவு செய்துள்ள மாணவர்கள், தங்களின் சான்றிதழ்களை, சம்பந்தப்பட்ட மையங்களில் பரிசீலித்து கொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுஉள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top