இந்திய தொழிலாளர் அரசு காப்பீடு சட்டத்தின் ஒழுங்குவிதி 31 திருத்தம் செய்யப்பட்டுள்ளது. புதியதிருத்தத்தின்படி தொழிலாளரின் பங்களிப்புத் தொகையானது தவணை மாதத்தின் கடைசி தேதியிலிருந்து 15 நாட்களுக்குள் செலுத்தப்பட வேண்டும்.
முன்னதாக, பங்களிப்புத்தொகை தவணை மாதத்தின் கடைசி தேதியின் 21 நாட்களுக்குள் செலுத்தப்படக் கூடியதாக இருந்தது. இது, ஜூன் 2017 மாதத்துக்கு செலுத்த வேண்டிய பங்களிப்பிலிருந்து அமலுக்கு வருகிறது. அதன்படி, ஜூலை 15ம் தேதிக்குள் செலுத்த வேண்டும். இதுதொடர்பாக, கடந்த 1ம் தேதி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.