தேசிய கீதம் பாடும் போது எழுந்து நிற்க விதிவிலக்கு

பத்து வகை மாற்று திறனாளி மாணவர்கள், தேசிய கீதத்தின்போது எழுந்து நிற்க விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, பள்ளி, கல்லுாரிகளுக்கு, தமிழக அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

பொது இடங்கள், அரசு நிகழ்ச்சிகள், பள்ளி, கல்லுாரி போன்ற கல்வி நிறுவனங்கள், திரையரங்குகள் உள்ளிட்டவற்றில், தினமும் தேசிய கீதம் ஒலிக்கப்படும். அப்போது, அங்கு கூடியிருப்போர், தேசியகீதத்துக்கு மரியாதை செலுத்தும் வண்ணம், எழுந்து நிற்பது வழக்கம்.இந்நிலையில், மாற்று திறனாளிகள் மற்றும் நோய்களால் பாதிக்கப்பட்ட இயல்பு நிலையில் இல்லாதவர்களால், எழுந்து நிற்க முடியாத நிலை உள்ளது. இது குறித்து, உச்ச நீதிமன்றம் சில விதிமுறைகளை வழங்கியுள்ளது.

அதன்படி, ‘ஆட்டிசம்’ பாதிக்கப்பட்டோர், பெருமூளை வாத பாதிப்புள்ளோர், கண் பார்வை குறைந்தோர், செவி கேட்புத்திறன் குறைந்தோர், வாய் பேச முடியாதோர், அறிவுசார் குறை கொண்டோர், மனநலம் பாதிக்கப்பட்டோர், பல விதங்களில் உடல் பாதிப்புக்கு ஆளானோர், சதை பிடிப்பு கொண்டோர், தொழுநோய் சிகிச்சை பெற்றவர்கள் என, 10 வகை மாற்று திறனாளிகள், தேசிய கீதத்தின் போது, எழுந்து நிற்க விதிவிலக்கு அளிக்கப்பட்டுஉள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top