தமிழக அரசின் சி, டி பிரிவு ஊழியர்களுக்கு போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, தமிழக நிதித்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் க.சண்முகம் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:–
தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு, இந்த ஆண்டு 8.33 சதவீதம் போனஸ் மற்றும் 1.67 சதவீதம் கருணைத் தொகை வழங்கப்படும். இந்த போனஸ் மற்றும் கருணைத் தொகை, போனஸ் சட்டத் திருத்தம் 2015–ன்படி, ரூ.21 ஆயிரம் வரை மாத ஊதியம் பெறுவோருக்குக் கிடைக்கும்