தமிழக அரசுக்கு நீதிபதி கிருபாகரன் அவர்கள் கேக்காத கேள்விகள்..(வலைஞர்கள் கேள்வி)

*தமிழக அரசுக்கு நீதிபதி கிருபாகரன் அவர்கள் கேக்காத கேள்விகள்..*

*கேள்வி எண் 21:*
*இடைநிலை ஆசிரியர்களுக்கு 2006 முதல் ஏன் கிரேடு-பே 9300-4200-34800 தரப்படவில்லை.?*

*கேள்வி எண் 22:*
*2003 பிறகு பின் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு ஏன் இன்னும் பழைய ஓய்வூதிய தரப்படவில்லை.?*

*கேள்வி எண் 23:*
*ஆசியர்களுக்கு கற்றல், கற்பித்தல் பணியை தவிர வேறு பணிகள் தரக்கூடாது.?*

*கேள்வி எண் 24:*
*இடைநிலை ஆசிரியர்கள் கிராமத்தில் அதிகமாக வேலை செய்கிறார்கள், விலைவாசி குறைவு என்று சம்பளத்தை குறைத்த அரசு, கிராமத்தில் இருக்கிறவர்கள் ஒட்டு போட்டாலும் செல்லாது என்று ஏன் அறிவிக்கவில்லை.?*

*கேள்வி எண் 25:*
*2003 முதல் தொகுப்பூதியத்தில் பணி நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு இன்னும் ஏன் பணிவரன் முறை செய்யப்படவில்லை.?*

*கேள்வி எண் 26:*
*ஆறாவது ஊதியக்குழுவில் ஏற்பட்ட ஊதிய முரண்பாடுகளை ஏன் இன்னும் களையவில்லை..*

*கேள்வி எண் 27:*
*இடைநிலை ஆசிரியர்கள் மட்டும் ஏன் வஞ்சிக்கப்படுகிறார்கள் அதை தீர்க்க எடுக்கப்பட்ட நடவடிக்கள் என்ன என்ன??..*

*கேள்வி எண் 28:*
*ஆசிரியர் சங்கங்கள் எத்தனை போராட்டங்கள், உண்ணவிரதங்கள், பேரணிகள் செய்தும் அவர்களுக்கு மதிப்பு அளித்து செவி சாய்க்காது ஏன்.?*

*கேள்வி எண் 29:*
*ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவிற்கு பேச்சு வார்த்தைக்கு அழைத்து மரியாதை செலுத்தாதது, சரிவர பேச்சு வார்த்தை நடத்ததாதும் ஏன்??*

*கேள்வி எண் 30:*
*ஆசிரியர்களின் கோரிக்கைகள் இன்று வரை ஏன் நிறைவேற்றவில்லை, கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் கல்வி தரம் எப்படி மேம்படும்???

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top