தோழர்களே வணக்கம். ஜாக்டோ-ஜியோ வழக்கு தொடர்பாக நாளிதழில் வெளிவந்துள்ள செய்தி தவறானது.
நமது வழக்கு தொடர்பாக இதுவரை மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அவர்களின்் பரிசீலனயில் உள்ளதே தவிர எந்த இறுதி முடிவும் எடுக்கவில்லை.ஜாக்டோ ஜியோ வழக்கை மீண்டும் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் விசாரணை செய்ய எந்த ஆணையும் பிறப்பிக்கவில்லை. நமது மூத்த வழக்கறிஞர் மதிப்பிற்குரிய ஐயா என்.ஜி.ஆர்.பிரசாத் அவர்கள் மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அவர்களிடம் இந்த வழக்கின் முக்கியத்துவம், ஏற்கனவே நான்கு மணிநேரத்திற்கு மேல் மதுரையில் வாதிட்டது, தலைமை செயலாளர் முன்னிலையானது மற்றும் இருதரப்பினரும் அதே நீதிபதிகளிடம் வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற ஒப்புதல் அளித்துள்ளது ஆகியவற்றை உரியமுறையில் எடுத்துரைத்துள்ளார்.
திங்கட்கிழமை அன்று தான் ஜாக்டோ ஜியோ வழக்கின் அடுத்த கட்ட விசாரணை எங்கு, என்று நடைபெறும் என்பது தெரியவரும். இதுபோன்ற நிர்வாக சிக்கல்கள் விரைவில் தீர்க்கப்படும். இருப்பினும் மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அவர்கள் இது குறித்து ஆணை பிறப்பித்த பிறகே தெளிவான நிலை ஏற்படும்.நமது மூத்த வழக்கறிஞர் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் இது குறித்து தொடர்ந்து கவனம் செலுத்தி வருகின்றோம்.. பொறுத்திருப்போம். அதுவரை நமது ஒற்றுமையை பாதுகாப்பது தலையாய கடமையாகும்.
ஒருங்கிணைப்பாளர்கள்
திரு மு.சுப்பிரமணியன்,
திரு.மாயவன்,
திரு.மீனாட்சிசுந்தரம்,
திரு.முத்துச சாமி,
திரு.தாஸ்,
திரு.தியாகராஜன்,
திரு.மோசஸ்,
திரு,வெங்கடேசன்,
திரு.தாமோதரன்,
திரு.அன்பரசு,
திரு.சுரேஷ்.