அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள இடங்களில் சிறப்பு ஆசிரியர்களை நியமிப்பதற்காக ஜூலை26ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டது. கடந்த மாதம் 23ம் தேதி போட்டித் தேர்வு நடந்தது. தற்போது கேள்விகளுக்கான தற்காலிக விடைக்குறிப்பு ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த விடைக்குறிப்பில் ஆட்சேபம் அல்லது தவறான விடைகள் இருந்தால், தேர்வு எழுதியவர்கள் 20ம் தேதிக்குள் ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு ஆதாரங்களுடன் தெரிவிக்க வேண்டும். இந்த கருத்துகள் அடங்கிய மனுக்கள் தபால் மூலமோ அல்லது ஆசிரியர் தேர்வு வாரியத்தில் வைக்கப்பட்டுள்ள பெட்டியிலோ சமர்ப்பிக்கலாம். இதற்கான ஆதாரங்கள் சமர்ப்பிக்கும் போது, தகுந்த புத்தகங்கள் அல்லது வழிகாட்டிகளில் இருந்து எடுத்துக்காட்ட வேண்டும்.
CLICK HERE TO DOWNLOAD TRB – SPECIAL TEACHERS OFFICIAL ANSWER KEY