சட்டப் படிப்புக்கு ஜூலை 14 வரை விண்ணப்பிக்கலாம்

சட்டப்படிப்புக்கு ஜூலை 14 வரை விண்ணப்பிக்கலாம் என்றுஅறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சீர்மிகு சிறப்பு சட்டக் கல்லூரியில் 3 ஆண்டு கால ஆனர்ஸ் சட்டப் படிப்பு (எல்எல்பி-ஆனர்ஸ்) வழங்கப்படுகிறது.

இப்படிப்பில் பட்டதாரிகள் சேரலாம்.குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி வகுப்பினர் எனில் 55 சதவீதம் போதும். 2017-18-ம் கல்வி ஆண்டில் 3 ஆண்டு ஆனர்ஸ் சட்டப் படிப்பில் சேர மே 31 முதல் விண்ணப்பம் வழங்கப்பட்டு வந்தது. இதற்கான கடைசி தேதி ஜூன் 30-ம் தேதியுடன் முடிவடைந்தது.இந்த நிலையில், மாணவர் களின் நலனை கருத்தில் கொண்டு விண்ணப்பம் வாங்கவும், பூர்த்தி செய்த விண்ணப்பம் வாங்கிடவும் கடைசி தேதி ஜூலை 14-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக சட்டப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. விண்ணப்பக் கட்டணம் ரூ.1000. எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கு ரூ.500 மட்டும்.சென்னையில் உள்ள சீர்மிகு சிறப்பு சட்டக் கல்லூரியில் விண் ணப்பங்களை வாங்கலாம்.

தபால் மூலம் பெற விரும்பு வோர் கூடுதலாக ரூ.100-க்கு டிமாண்ட் டிராப்ட் எடுத்து அனுப்பி பெற்றக்கொள்ளலாம். கூடுதல் விவரங்களை சட்டப் பல்கலைக் கழகத்தின் இணையதளத்தில் (www.tndalu.ac.in) தெரிந்து கொள்ளலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top