Tiruppur District Court Recruitment 2017 – OA, Junior Administrative Assistant Posts – Apply Online

குவைத்தில் வேலைவாய்ப்பு! தமிழக அரசு அறிவிப்பு!

கொத்தனார், தச்சர்கள் உள்ளி்ட்ட பணியிடங்களுக்கு உரிய தகுதி மற்றும் விருப்பமிருப்பின், தங்களின் சுயவிவரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன் கல்வி, அனுபவம், பாஸ்போர்ட் மற்றும் ஒரு புகைப்படத்தை [email protected] ஈமெயில் வாயிலாக அனுப்பி வைக்குமாறு தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “இந்திய தொலைத்தொடர்புத்துறையின் குவைத் திட்டப் பணியிடங்களுக்கு 21 முதல் 50 வயதுக்குட்பட்டு தொலைத்தொடர்புத்துறை பணி அனுபவம் பெற்று எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் 5 வருட பணி அனுபவம் பெற்று ECNR பாஸ்போர்ட் வைத்துள்ள ஒன்பது கொத்தனார்கள் (மாத ஊதியம் ரூ.23,760) இரண்டு தச்சர்கள் (மாத ஊதியம் ரூ.23,760) மற்றும் தொலைத்தொடர்பு கேபிள் பொருத்துவதில் அனுபவம் பெற்ற 82 லேபர்கள் (மாத ஊதியம் ரூ.17,280) மற்றும் பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் 2 வருட அனுபவம் பெற்ற குவைத் நாட்டின் செல்லத்தக்க ஓட்டுநர் உரிமம் பெற்ற கனரக வாகன ஓட்டுநர்கள் (மாத ஊதியம் ரூபாய் 28,080) தேவைப்படுகிறார்கள். மேலும் விரிவான தகவல்களுக்கு www.omcmanpower.com என்ற இந்நிறுவன வலைதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு மூன்று வருட பணி ஒப்பந்த அடிப்படையில் விமான டிக்கெட், இலவச இருப்பிடம், இலவச மருத்துவம், மருத்துவக்காப்பீடு, மிகை நேரப் பணி ஊதியம் மற்றும் குவைத் நாட்டின் சட்டதிட்டத்துக்குட்பட்ட இதர சலுகைகளும் வழங்கப்படும்.

மேலும், 30 மாதங்கள் செல்லத்தக்க பாஸ்போர்ட் இருத்தல் வேண்டும். மேற்குறிப்பிட்ட பணியிடங்களுக்கு உரிய தகுதி மற்றும் விருப்பமிருப்பின், தங்களின் சுயவிவரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன் கல்வி, அனுபவம், பாஸ்போர்ட் மற்றும் ஒரு புகைப்படத்தை [email protected] ஈமெயில் வாயிலாக அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top