கவுரவ விரிவுரையாளர்களுக்கு சம்பள உயர்வு

கவுரவ விரிவுரையாளர்களுக்கு சம்பளம் உயர்த்தி வழங்குவதற்கான பணிகளில் உயர்கல்வித்துறை ஈடுபட்டுள்ளது. கலை அறிவியல் கல்லுாரிகளில் 3500, இன்ஜி., பாலிடெக்னிக் கல்லுாரிகளில் 2 ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர். ஆறு மாதத்துக்கு ஒரு முறை இவர்கள் புதிய பணி அமர்த்தலில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

கல்லுாரி விடுமுறை காலமான மே மாதம் மட்டும் சம்பளம் கிடையாது. பணி நிரந்தரம் வேண்டும், குறைந்த பட்ச சம்பளமாக ரூ.25 ஆயிரம் நிர்ணயிக்க வேண்டும் என பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இவர்களது சம்பளத்தை ரூ.25 ஆயிரமாக உயர்த்த திட்டமிட்டு அவர்களின் விபரத்தை உயர்கல்வித்துறை சேகரித்து வருகிறது.

கவுரவ விரிவுரையாளர் ஒருவர் கூறியதாவது: 20 ஆண்டுக்கும் மேலாக பணி நிரந்தரம் என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறோம். ஆனால், காலி பணியிடங்களில் அண்ணாமலை பல்கலையில் உபரியாக உள்ளவர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த ஐந்து ஆண்டுக்கு முன்பே உரிய கல்வி தகுதிகளுடன் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு ரூ.25 ஆயிரம் சம்பளம் வழங்க வேண்டும் என யு.ஜி.சி., பரிந்துரைத்துள்ளது. கர்நாடகா, ஆந்திரா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் கவுரவ விரிவுரையாளருக்கு ரூ.25 ஆயிரம் சம்பளம் வழங்கப்படுகிறது.

ஏழாவது ஊதியக்குழு பரிந்துரையிலும் குறைந்த பட்ச சம்பளம் ரூ.21 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எங்களது கோரிக்கையை ஏற்க வேண்டும், என்றார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top