கல்வி உதவித்தொகை: அக்.31 வரை வாய்ப்பு

அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் படிக்கும் சிறுபான்மை மாணவர்கள், கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கும் தேதி செப்.,30ல் இருந்து அக்.,31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அரசு, உதவிபெறும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பிளஸ் 1, பிளஸ் 2 மற்றும் ஐ.டி.ஐ., ஐ.டி.சி., பாலிடெக்னிக் பட்டயப்படிப்புகள், இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பு, எம்.பில்., ஆராய்ச்சி படிப்பு படிக்கும் கிறிஸ்தவர், முஸ்லிம், சீக்கியர், ஜெயின் மதத்தை சார்ந்த மாணவர்கள் கல்வி உதவித்தொகை திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கான காலக்கெடு அக்.,31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

www.scholarships.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். கடந்த ஆண்டு பொதுத் தேர்வில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.பெற்றோர் அல்லது பாதுகாவலர் ஆண்டு வருமானம் அனைத்து வகையிலும், இரண்டு லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும். ஆதார் எண் குறிப்பிடப்பட வேண்டும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top