பல்கலைக்கழகங்கள் மற்றும் கல் லூரிகளில் மாணவர்களிடமிருந்து எந்த விதமான கட்டணத்தையும் ரொக்கமாக வசூலிக்கக் கூடாது. மாணவர் சேர்க்கை கட்டணம், கல்விக் கட்டணம், தேர்வுக் கட்ட ணம், விடுதி கட்டணம் என எதுவாக இருந்தாலும் அனைத்தை யும் மின்னணு பணப்பரிமாற்றம் (நெட் பேங்கிங், டெபிட் கார்டு, கிரெடிட்கார்டு) மூலமாக மட் டுமே வசூலிக்க வேண்டும் என்று அனைத்து பல்கலைக்கழகங் களுக்கும், கல்லூரிகளுக்கும் பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) அண்மையில் ஓர் உத்தரவை பிறப்பித்தது.
யுஜிசி-யின் இந்த அதிரடி உத்தரவு தனியார் பள்ளிகளிலும் நடைமுறைப்படுத்தப்படுமா என்று மாணவர்களின் பெற்றோர்கள்ஏக்கத்தில் உள்ளனர். ரொக்க மாக இல்லாமல் மின்னணு பணப் பரிமாற்றம் அல்லது வங்கிக் கணக்கு மூலமாக மட்டுமே கல்விக் கட்டணம் வசூலிக்கப்பட்டால் அதிகப்படியான கட்டணவசூலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று பெற்றோர்கள் கருதுகிறார்கள்.இதுகுறித்து தமிழ்நாடு மாணவர் பெற்றோர் கூட்டமைப்பின் தலைவர் அருமைநாதன் கூறிய தாவது:கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் அனைத்து விதமானகட்டணங்களையும் ரொக்கமாக இல்லாமல் மின்னணு பணப்பரிமாற்றம் மூலமாக மட்டுமே செலுத்த வேண்டும் என்ற யுஜிசியின் உத்தரவு வரவேற்கத் தக்கது. இந்த நடைமுறையை தனியார் பள்ளிகளுக்கும் கொண்டு வர வேண்டும். அனைத்து பெற் றோருமே இதை வரவேற்பார்கள்.அரசு நிர்ணயிக்கும் கல்விக் கட்டணத்தை டிமாண்ட் டிராப்ட் மூலமாகவோ பள்ளியின் வங்கிக் கணக்கில் நேரடியாக அல்லது நெட் பேங்கிங் மூலமாகவோ செலுத்தச் சொல்லலாம். பாயின்ட் ஆப் சேல் எனப்படும் ஸ்வைப்பிங் இயந்திரத்தை பயன்படுத்தி டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு மூலமாக கட்டணத்தை கட்டச் சொல்லலாம்.பள்ளிகளில் ரொக்க பயன்பாடே இருக்கக் கூடாது. தற்போதுகூட50 சதவீத தனியார் பள்ளிகளில் வங்கிச் செலான் மூலம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதற்கு எந்தவிதமான ஒப்புகைச் சீட்டும் கொடுக்கப்படுவதில்லை. ஒருவேளை கொடுத்தாலும் அரசு நிர்ணயிக்கும் கட்டண அளவுக்கு மட்டுமே சீட்டு கொடுக்கப்படும்.
பெற்றோர்கள் செலுத்திய தொகை ஒன்றாகவும், ரசீது தொகை வேறொன்றாகவும் இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.கல்வியாளரும், பொது பள்ளிக் கான மாநில மேடை அமைப்பின் பொதுச்செயலாளருமான பி.பி.பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறும் போது, “தனியார் பள்ளிகளில் ரொக்கமாக பணம் செலுத்துவதை தடுத்துவிட்டால் மட்டும் கல்விக் கட்டணப் பிரச்சினை தீர்ந்துவிடப் போவதில்லை. ரொக்கமாக இல் லாமல் வங்கிக் கணக்கில் மட்டும் செலுத்துமாறு உத்தரவு வருகிறது என்று வைத்துக்கொள்வோம். பள்ளி நிர்வாக கணக்கு, அறக்கட்டளை கணக்கு என வேறு வேறு பெயரில் கணக்கு வைத்துக்கொண்டு கூடுதல் கட்டணத்தை வெவ்வேறு வங்கிக் கணக்குகள் மூலமாக வசூலிக்கப்படலாம்.இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு என்னவென்றால், ஒவ்வொரு பள்ளிக்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ள கல்விக் கட்டணத்தை அனைவரும் தெரிந்துகொள்ளும் வகையில் இணையதளத்தில் வெளியிட வேண்டும். பள்ளியின் வாசலில், அந்தப் பள்ளிக்கு நிர்ணயிக்கப்பட் டுள்ள கட்டண விவரங்களை வகுப்பு வாரியாக எழுதி வைக்கப்பட வேண்டும்.
பெற்றோர் ஆசிரியர் கழகத்தில் கல்வி அதிகாரி ஒருவரையும் இடம்பெறச்செய்து குறிப்பிட்ட காலத்துக்கு ஒருமுறை ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டி அந்த கல்வி அதிகாரி கட்டண விவரங்களை பெற்றோருக்கு தெரியப்படுத்த வேண்டும்” என்றார்.தனியார் சுயநிதி பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர் களிடம் கேட்டபோது, “அரசு நிர்ண யித்த கட்டணத்தைஆரம்பத்தில் டிமாண்ட் டிராப்டாகவே வாங்கி னார்கள். ஆனால், தற்போது டிமாண்ட் டிராப்ட் கொடுத்தால் வாங்குவதில்லை. பணமாக கட்டச் சொல்லி நிர்ப்பந்தம் செய்கிறார்கள். நாம் கொடுக்கும் முழு தொகைக்கும் ரசீது தருவதில்லை. குறைவான தொகைக்குத்தான் ரசீது கொடுக்கிறார்கள்.
கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களில் கல்விக் கட்டணம், தேர்வுக் கட்டணம், போக்குவரத்து கட்டணம் என அனைத்து விதமான கட்டணங்களையும் ரொக்கமாக இல்லாமல் மின்னணு பணப்பரிமாற்றம் மூலமாக மட்டுமே வசூலிக்க வேண்டும் என்ற உத்தரவை தனியார் பள்ளிகளிலும் நடைமுறைப்படுத்தினால் அனைத்து பெற்றோர்களுமே மிகவும் மகிழ்ச்சி அடைவார்கள்” என்று தெரிவித்தனர்.