கோபி, “கற்றல் குறைபாட்டை தீர்க்க, புது திட்டம் அறிமுகப்படுத்தப்படும்,” என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
ஈரோடு மாவட்டம், கோபி அருகே நடந்த விழாவில் அவர் பேசியதாவது:
தமிழக பள்ளிக்கல்வித் துறையில், பல்வேறு மாற்றங்கள் உருவாக்கப்படுகின்றன. மாணவர்களுக்கு எந்த விபத்து ஏற்பட்டாலும், 24 மணி நேரத்தில், நிவாரணம் மேற் கொள்ளும் திட்டம் விரைவில் அறிவிக்கப்படும்.
தமிழகத்தில், 1௦ சதவீத மாணவர்கள், கற்றலில் குறைபாடு உள்ளதாக புள்ளி விபரம் கிடைத்து
உள்ளது. இதை தீர்க்க, ஒரு புதிய திட்டம், அடுத்த மாதம் கொண்டு வரப்படும். படிக்கும் மாணவர்கள் அனைவருக்கும், வேலைவாய்ப்பு உத்தரவாதத்தை அளிக்கும், கல்வியை உருவாக்குவோம்.இவ்வாறு அவர் பேசினார்.