கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு இலவச உபகரணங்கள் கிடையாது! செங்கோட்டையன் தகவல்*

‘கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் படிக்கும் மாணவர்களுக்கு, இலவச உபகரணங்கள் வழங்கப்பட மாட்டாது’என்று சட்டப்பேரவையில் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று, திருமயம் எம்எல்ஏ., ரகுபதி, கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் படிக்கும் மாணவர்களுக்கு இலவச உபகரணங்கள் வழங்கப்படவில்லை என்றும், உபகரணங்கள் மாணவர்களுக்கு வழங்கப்படுமா என்றும் கேள்வி எழுப்பினார்.

அதற்குப் பதில் அளித்த கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் படிக்கும் மாணவர்களுக்கு, இலவச உபகரணங்கள் தரப்படாது. கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் பயிலும் மாணவர்களுகளுக்கு தமிழக அரசு கட்டணம் செலுத்துகிறது. மத்திய அரசின் நிதியை எதிர்பார்க்காமல் தமிழக அரசு கட்டணம் செலுத்துவதால், நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது” என்று கூறினார்.

துணை மின் நிலையங்கள் அமைப்பதுகுறித்து எம்எல்ஏ., ஈஸ்வரன் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, தஞ்சாவூர் பகுதியில் நான்கு துணை மின் நிலையங்கள் விரைவில் அமைக்கப்பட உள்ளன. இதற்கான பணிகள் நடந்து வருகிறது. ஈரோடு பெரியகள்ளிப்பட்டியில், துணை மின் நிலையங்கள் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்படும். 11 கி.வாட் துணை மின் நிலையம் அமைக்க இடம் தேர்வுசெய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top