சென்னை: ஐ.டி.ஐ., என்ற, அரசு தொழிற்பயிற்சி மையங்களுக்கான, மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், நேற்று துவங்கியது. தமிழகத்தில், 85 அரசு ஐ.டி.ஐ.,க்களில், பல்வேறு பயிற்சிகளில், 27 ஆயிரத்து, 494 இடங்கள் உள்ளன.
483 தனியார், ஐ.டி.ஐ.,க்களில், அரசு ஒதுக்கீட்டிற்கு, 8,990 இடங்களும் உள்ளன. இதற்கு, 52 ஆயிரத்து, 904 பேர் விண்ணப்பித்து இருந்தனர். மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங், அனைத்து மாவட்டங்களிலும், நேற்று துவங்கியது. விண்ணப்பித்தோருக்கு, கவுன்சிலிங் நடக்கும் நாள், இடம், நேரம் போன்ற விபரங்கள், அவர்களின் மொபைல் எண்ணிற்கு, எஸ்.எம்.எஸ்., மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள, மாணவ, மாணவியருக்கு, கிண்டியில் உள்ள, அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில், நேற்று துவங்கிய கவுன்சிலிங், ஜூலை, 7 வரை நடைபெறுகிறது.