ஊதிய குழு அளித்துள்ள அறிக்கையில் கீழ் கண்ட முக்கிய அம்சங்கள் இடம் பெற்று இருப்பதாகவும் இப்பரிந்துரைகள் இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்படும் என தெரிகிறது
- 01.01.16 முதல் ஊதிய உயர்வு முன்தேதியிட்டு வழங்கப்படும்
- நவம்பர் 2017 முதல் புதிய சம்பளம் வழங்கப்படும்
- ஜனவரி 2016 முதல் அக்டோபர் 2017 வரையுள்ள நிலுவை 3 தவணையாக வழங்கப்படும்
- முதல் தவணை மார்ச் 2018 லும் 2 ம் தவணை செப்டம்பர் 2018லும் இறுதி நிலுவை மார்ச் 2019 லும் வழங்கப்படும்
- ஊதிய உயர்வு 20% முதல் 25% வரை அளிக்கப்படும்
- தற்போது பணிபுரிவோர் தாங்கள் 31.12.16 அன்று பெறும் ( அடிப்படை ஊதியம் + தர ஊதியம்+ தனி ஊதியம்) X 2.57 இவற்றின் பெருக்கு தொகையில் வரும் தொகையை அட்டவணையுடன் பொருந்தி அதன் தொகையே அவர் 01.01.2016 முதல் பெறும் ஊதிய உயர்வு தொகையாகும்.
- வீட்டு வாடகை படி தற்போது பெறும் வீட்டு வாடகை படியில் 2.5 மடங்கு ஆகும்
- மருத்துவ படி ரூ 300 என உயர்த்தப்பட்டு வழங்கப்படும்
- இதர படிகள் அவற்றின் 2 மடங்காக வழங்கப்படும்.
- ஓய்வூதியதாரர்களுக்கும் இது பொருந்தும்
- ஒவ்வொரு துறைகளுக்கும் தனி தனியே அரசாணை வெளியிடப்படும்.