இலவச ‘லேப்-டாப்’ இந்த ஆண்டும் இல்லை!

அரசு பள்ளி மாணவ – மாணவியருக்கு, 2011 முதல், லேப் – டாப்களை, அரசு இலவசமாக வழங்கி வருகிறது.
இதுவரை,40 லட்சம் பேருக்குவழங்கப்பட்டுள்ளன.

2016 – 17 கல்வியாண்டில், லேப் – டாப் கொள்முதலுக்கு, ‘டெண்டர்’ விடுவதில் பிரச்னை ஏற்பட்டதால், கடந்த ஆண்டு மாணவர்களுக்கு கிடைக்கவில்லை. தற்போது, இந்த கல்வியாண்டிலும், அதே நிலைமை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து, தகவல் தொழில்நுட்ப துறைஅதிகாரிகள் கூறியதாவது: கடந்த கல்வியாண்டுக்கான லேப் – டாப்கள்,இப்போது தான் வரதுவங்கியுள்ளன. அவற்றைகொடுத்து முடிப்பதற்கே, பல மாதம் ஆகிவிடும். வழக்கமாக, லேப் – டாப் கொள்முதல்செய்வதற்கு முன், தகவல் தொழில்நுட்ப துறையில்,அது தொடர்பாக அரசாணைவெளியிடப்படும். அதன்பின், பல மாதங்கள் கழித்து, கொள்முதல் துவங்கும்.

இந்த ஆண்டுக்கான அரசாணை, இன்னும் வெளியிடப்படவில்லை. அதனால், இந்த கல்வியாண்டில் பயிலும் மாணவர்களும், காத்திருக்க வேண்டியிருக்கும். இவ்வாறு அவர்கள்கூறினர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top