இன்று (செப்.,15) முதல் தலைமை செயலக ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்துள்ளனர்.
பழைய ஒய்வு ஊதிய திட்டத்தை அமல்படுத்து வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் வேலை நிறுத்த போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இவ்வமைப்பினருக்கு ஆதரவாக இன்று(செப்.,15) முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடபோவதாக தலைமை செயலகஊழியர்சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து கூறியிருப்பதாவது: தமிழ்நாடு தலைமை செயலக சங்க பொதுக்குழுவில் வேலை நிறுத்தம் குறித்து முடிவு எடுக்கப்பட்டுள்ளது.இந்த வேலை நிறுத்தத்தில் 4 ஆயிரத்து 500 பேர் பங்கேற்பர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.