ஆவின் நிறுவனத்தில் வேலை!!

ஆவின் நிறுவனத்தில் பணிகள்

தமிழகத்தின் பால் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் ஆவின் நிறுவனம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. தஞ்சாவூரில் உள்ள கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தில் தற்சமயம் காலியாக உள்ள பல்வேறு இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது.

காலியிட விபரம் : மேலாளர் – இன்ஜினியரிங்கில் 1, டெபுடி மேனேஜர் – டெய்ரியிங்கில் 2, பிரைவேட் செக்ரட்டரி – 1, கிரேடு 2 எக்ஸ்டென்சன் ஆபிசரில் 2, ஆபிஸ் எக்சிக்யூடிவில் 2, ஆபிஸ் ஜூனியர் எக்சிக்யூடிவில் 1, எலக்ட்ரிக்கல் டெக்னீசியனில் 1, பாய்லர் டெக்னீசியனில் 1, ரெப்ரிஜிரேஷன் டெக்னீசியனில் 1ம் காலியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: மேலாளர் – இன்ஜினியரிங் பிரிவுக்கு பி.இ., அல்லது பி.டெக்.,கில் எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல் அண்டு இன்ஸ்ட்ரூமென்டேஷன், எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன், ஆட்டோமொபைல், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் ஆகிய ஏதாவது ஒரு பிரிவில் முடித்திருக்க வேண்டும். டெபுடி மேனேஜர் – டெய்ரியிங் பதவிக்கு டெய்ரி சயின்ஸ், டெய்ரியிங் ஆகிய ஏதாவது ஒரு பிரிவில் பி.டெக்., முடித்திருக்க வேண்டும். பிரைவேட் செக்ரட்டரி பதவிக்கு பட்டப் படிப்புடன் டைப்பிங் தேவைப்படும். எக்ஸ்டென்சன் ஆபிசர் பதவிக்கு பட்டப் படிப்புடன் கோ-ஆப் பயிற்சி தேவைப்படும். இதே தகுதியே ஜூனியர் ஆபிஸ் எக்சிக்யூடிவ் பதவிக்கும் தேவை. எலக்ட்ரிக்கல் டெக்னீசியன் பதவிக்கு ஐ.டி.ஐ., படிப்பு தேவை. பாய்லர் டெக்னீசியன் பதவிக்கு பாய்லர் அட்டென்ெடண்ட் சான்றிதழ் படிப்பு தேவை. ரெப்ரிஜிரேஷன் டெக்னீசியனுக்கு ஐ.டி.ஐ., தேவை.

விண்ணப்பக் கட்டணம் : ரூ.250/-ஐக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: பரிந்துரைக்கப்பட்ட படிவ மாதிரியிலான விண்ணப்பத்தை முழுமையாக நிரப்பி, உரிய இணைப்புகளைச் சேர்த்து, டி.டி.,யுடன் பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி:
General Manager,
Thanjavur District Cooperative Milk Producers’ Union Ltd.,
Nanjikkottai Road,
Thanjavur – 613 006

விண்ணப்பிக்க கடைசி நாள்: 10.11.2017

விபரங்களுக்கு: www.aavinthanjavur.com/downloads/employment-notification.pdf

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top